பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம் - 5

அவர்களிருவரும் அவ்வாறு சம்பாஷித்தபடி சிறிதுதுரத்தில் நின்றுகொண்டிருக்க, சவத்தண்டை இருந்த வைத்தியர்களில் ஒருவர் வெளிப்பட்டார். சிறிது தூரத்திற்கு அப்பால் உட்கார்த்திருந்த லீலாவதி பிரேத ஆராய்ச்சி முடிந்து விட்டதென்று தீர்மானித்துக் கொண்டவளாய் அவ்விடத்தை விட்டெழுந்து மற்றவர்களிடம் வந்து சேர்ந்தாள். அப்போது அவளது முகம் பயத்தினால் வெளிறடைந்து, அவளது மனதின் சங்கடங்களையும் உடம்பின் தளர்ச்சியையும் எளிதில் வெளிப்படுத்தியது. ஆனாலும், உண்மை எப்படியும் வெளிப்படுமென்ற உறுதியையும் நம்பிக்கையையும் அவள்கை விடாமல் திடமாகவே அவர்களுக்கு முன்னர் காணப்பட்டாள்.

14

பிரேதத்தண்டையிலிருந்து புறப்பட்டு வந்த வைத்தியர் லீலாவ்தி வருவதைக்கண்டு சிறிது நின்று அவளும் வந்து சேர்ந்து தாம் சொல்லும் முடிவைக் கேட்கவேண்டுமென்று பொறுத்தி ருந்தார். அவள் வந்து சேர்ந்தவுடனே வைத்தியர் மற்றவர்களை நோக்கி, தாமும் தமது சகாவான இன்னொரு வைத்தியரும் பிரேதத்தை ஆராய்ச்சி செய்ததாகவும், லீலாவதி சொன்னதற்கு அனுகூலமாகவே சவத்தினிடம் குறிகள் காணப்படுவதாகவும் கூறினார்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் புன்னகை செய்த முகத்தோடு லீலாவதியை நோக்கி, ‘அம்மா! நாங்கள் செய்யக் கூடிய ஆராய்ச்சிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டோம். நீங்கள் சொன்ன வரலாறெல்லாம் உண்மையென்றே ஏற்படுகிறது. ஆகையால், உங்கள் மேல் எங்களுக்கு யாதொரு சந்தேகமாவது தாவாவாவது கிடையாது. இனி நீங்கள் எங்களோடு போலீஸ் கச்சேரிக்கு வரவேண்டுமென்ற அவசியமும் இல்லை; இங்கே இருக்க வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. உங்களுக்கு இஷ்டமானால் நீங்கள் உங்களுடைய ஜாகைக்குப் போகலாம்’ என்றார்.