பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பூர்ணசந்திரோதயம் - 5 போனதுண்டா என்பதை பெரிய மகாராணியின் வாய் மூல மாகவே நீ அறிந்து கொள்ளும்படி செய்கிறேன்’ என்றாள்.

அதற்குமேல் என்ன சொல்வதென்பதை அறியாமல் கருப்பாயி அசைவற்று நின்றுவிட்டாள்.

உடனே, நீலமேகம்பிள்ளை பேசத் தொடங்கி, ‘அம்மா நீங்கள் இவ்வளவுதூரம் உறுதியாகச் சொல்லும்போது, இதற்கு மேல் நாங்கள் சந்தேகிப்பது நியாயமல்ல. அதிருக்கட்டும்; இந்த வீட்டின் இலக்கம் 13தானே?"என்றார்.

அம்மணிபாயி, “ஆம், 13-தான்’ என்றார்.

நீலமேகம்பிள்ளை இங்கே சோமசுந்தரம்பிள்ளை என்று யாராவது இருந்ததுண்டா?’ என்றார்.

அம்மணிபாயி, ‘இந்த வீடு தலைமுறை தலைமுறையாக எங்களுக்கே சொந்தமானது. நாங்கள் மகாராஷ்டிர ஜாதியைச் சேர்ந்தவர்கள்; இங்கே சோமசுந்தரம் பிள்ளையென்று யாரும் இருந்ததில்லை’ என்றாள்.

அதைக்கேட்ட நீலமேகம்பிள்ளை, ‘சரி; அப்படியானால் நாங்கள் போகிறோம். நீங்கள் இனி கதவை மூடிக்கொண்டு உள்ளே போகலாம். உள்ளே ஏதோ அலுவலாக இருந்த உங்களுக்கு அநாவசியமான தொந்தரவு கொடுத்து விட்டோம்” என்று கூற, அம்மாணிபாயி உடனே கதவை மூடித் தாளிட்டுக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

நீலமேகம்பிள்ளை, கருப்பாயியை அழைத்துக்கொண்டு ஸ்ாரட்டிற்குப் போய், அதில் ஏறி உட்கார்ந்து வண்டியைத் திருப்பி விடுத்துக்கொண்டு மறுபடியும் தமது ஜாகைக்குப் போய்ச்சேர்ந்தார். வரும்போது, பக்கத்திலிருந்த சில மனிதரிடம் விசாரித்து அந்த வீடு அம்மணிபாயி என்பவளுடைய வீடு என்பதை அறிந்துகொண்டார். அவரது மன்தில் குழப்பமும் பிரமையுமே குடிகொண்டிருந்தன. எது உண்மை என்பதை