பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - பூர்ணசந்திரோதயம் - 5 அந்த தஸ்தாவேஜியை இன்ஸ்பெக்டரிடம் காட்ட வேண்டுமென்ற ஆசை நீல்மேகம் பிள்ளைக்கு உண்டாயிற்று. ஆனால், தாம் தமது சகோதரிகளையும் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மும்முரமாக எழுந்து அவரை வதைத்தது. ஆகையால், தாம் முதலில் திருவாரூர் போய் அவர்களைப் பார்த்து, அவர்க ளெல்லோரையும் தஞ்சைக்கு அழைத்துக்கொண்டு வந்தபிறகு தாம் போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டுமென்றும், உடனே லீலாவதியையும் கண்டு பேசி, அவளைப் பற்றி தமது தந்தை எழுதியுள்ள விஷயங்களை அவளுக்குத் தெரிவித்து, தம்மால் அவளுக்கு எவ்வித உதவி தேவையானாலும் அதை உடனே செய்ய வேண்டுமென்றும் அவர் முடிவு செய்திருந்தார். அந்த நினைவே இப்போது அவரது மனதில் உண்டாயிற்று. தாம் இன்ஸ்பெக்டரிடம் போய் உயிலின் விவரத்தை வெளியிட்டு தாம் திருவாரூருக்குப் போய் வந்த வரலாற்றையும் தமது தங்கைகள்ஆச்சரியகரமாக வஞ்சிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை யும் தெரிவித்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் படி அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டு மென்ற எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, அவர்கருப்பாயியைத் தமது மாளிகையில் விட்டுவிட்டுத் தனிமையில் புறப்பட்டுப் போலீஸ் இன்ஸ்பெக்டரது ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தார்.

நீலமேகம் பிள்ளை உண்மையில் பெருந்தன்மையும் கண்ணியபுத்தியும் நன்னடத்தையும் வாய்ந்த உத்தம புருஷர் என்பதை போலீஸ் இன்ஸ் பெக்டர் நன்றாக அறிந்தவர். ஆதலால், அவர் நீலமேகம்பிள்ளையினிடம் அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். அவர் திடீரென்று தமது இருப்பிடத் திற்கு வந்ததைக் கண்ட இன்ஸ்பெக்டர் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டு நிரம்பவும் உவப்போடு அவரை வரவேற்று மரியாதை செய்து ஆசனமளித்து உட்காரச் செய்து, ‘உங்களைப் பார்த்து சுமார் இருபத்தைந்து நாட்களிருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுடைய ஞாபகம் என் மனசில்