பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பூர்ணசந்திரோதயம்-5 இதுவரையில் அப்படி இருந்ததென்று சொன்னேன். நான் எடுத்துக்கொள்ளவேண்டிய பிரயாசைகளெல்லாம் அநேகமாய்த் தீர்ந்துவிட்டன. இனி எனக்கு ஒய்வுதான். வேறொன்றுமில்லை. இந்த வழக்கைப்பற்றி ஒருவேளைநீங்கள் கேள்வியுற்றிருப்பீர்கள். இது ஒரு பெண்ணைப் பற்றியது. அந்தப்பெண் இருப்பது கருந்தட்டாங்குடியில். அந்தப் பெண்ணை அதன் தாய் தகப்பனார்மார் மகரநோம் புச் சாவடியிலுள்ள ஒருவருக்குக் கட்டிக்கொடுப்பதாகத் தீர்மானித்து, கல்யாணத்திற்காகப் பெண்ணை அலங்காரம் செய்து கொட்டு முழக்கோடு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்தப் பெண்ணைக் கட்டுவதற்கு பாத்தியஸ்தனான வேறொருவன் அந்தப் பெண்ணைத் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று கேட்டதற்கு ஏதோ சில காரணங்களை முன்னிட்டு பெண் வீட்டார் இணங்கவில்லை. அந்தப் பாத்தியஸ்தன் அந்தப் பெண்ணை எப்படியாவது பலவந்த மாகத் தூக்கிக்கொண்டு போய்த் தாலி கட்டிவிட வேண்டு மென்று, அதற்காக நூற்றுக் கணக்கில் ஆள்களைத் தயாரித்துக் கொண்டிருந்த சங்கதி பெண்வீட்டாருக்குத் தெரிந்தது. அவர்கள் எங்களுடைய உதவியை நாடி எங்களுக்கு ஒரு மனு அனுப்பிக்கொண்டார்கள். நாங்கள்.அதை அற்பமாக மதித்து சில ஜெவான்களையே அனுப்பி வைத்தோம். எதிர்க்கட்சிக்காரன் சுமார் இருநூறு ஆள்களோடு வந்து தடிகளையும் கத்திகளையும் உபயோகப்படுத்தி பெருத்த கலகம் விளைவித்து, பெண்ணை அபகரித்துக் கொண்டு போய்விட்டான். பெண்வீட்டாருள் சிலரும், போலீஸ் ஜெவான்கள் சிலரும் அடிபட்டு வீழ்ந்துவிட்டனர். அவர்களுள் பலர் பலத்த காயம்பட்டும் பலர் மாண்டும் போயினர். அந்தச் சங்கதியை அறிந்த நான் ஏராள மான ஜெவான்களை அழைத்துக் கொண்டு எதிரிகளிருந்த இடத்திற்குப் போய்; அவர்களுள் பலரைக் கைதி செய்து, பெண்ணையும் மீட்டுக் கொண்டு வந்து சேர்ந்தேன்.