பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 181 பெண்ணைக் கொண்டுபோவதற்குக் காரணபூதர்களாயிருந்த முக்கியமான ஐந்தாறு மனிதர்கள் ஒடி ஒளிந்து கொண்டனர். ஆதலால், அவர்களைப் பிடிப்பதற்காக நான் இத்தனை நாட்கள் பிரயாசைப்பட்டேன். எல்லோரும் அகப்பட்டுவிட்டார்கள். பெண்ணை அபகரித்துக்கொண்டு போய்க் கட்டிக்கொள்ள இருந்த அந்தப் பாத்தியஸ்தன் கடைசியாக நேற்று தினந்தான் அகப்பட்டான். இனி எனக்கு யாதொரு பிரயாசையுமில்லை. ஆகையால், இப்போது நீங்கள் வந்ததனால் எனக்குக் கொஞ்சமும் ஆதங்கமாவது இடைஞ்சலாவது கிடையாது. உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டுமோ அதை நீங்கள் தெரிவிக்கலாம். என்னால் இயன்ற உதவியை நான் செய்யத் தடையில்லை. நான் பொது ஜனங்களுடைய சேவகன். அவர்களுக்கு நேரும் இடர்களை என்னால் ஆன வரையில் விலக்கவேண்டியது என்னுடைய கடமை. என்னால் ஒழிவு ஏற்படுகிறவரையில் நீங்கள் காத்திருப்பது என்பது ஒருநாளும் முடியாத காரியம். சமுத்திரத்தில் அலைகள் ஒய்ந்தாலும் ஒயலாம். போலீசாருடைய மனக்கவலை ஒரு rணநேரங்கூட ஒயாது” என்று ஹாஸியமாக மறுமொழி கூறினார்.

அதைக் கேட்ட நீலமேகம் பிள்ளை ஒருவாறு துணிவும் மகிழ்ச்சியும் அடைந்தவராய்த் தமது மடியிலிருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்துப் பிரித்து அதற்குள்ளிருந்த ஒரு தஸ்தாவேஜியை எடுத்து இன்ஸ்பெக்டரிடம் நீட்டி, ‘இந்தக் காகிதத்தைப் பாருங்கள். இது இன்னதென்ற அடையாளம் உங்களுக்குத் தெரிகிறதா?’ என்றார். -

உடனே இன்ஸ்பெக்டர் அந்தக் காகிதத்தை உற்றுப் பார்த்து குழப்பமடைந்த முகத்தோடு, ‘இது இன்னதென்பது தெரிய வில்லையே! இதற்குமுன் இதை நான் பார்த்திருக்கிறேனா?” என்றார்.