பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பூர்ணசந்திரோதயம் - 5 நீலமேகம் பிள்ளை, ‘அன்றையதினம் இரவில் என் தகப்பனாருடைய உடம்பிலிருந்து நீங்கள் எடுத்து என்னிடம் கொடுத்தீர்களே. அதுவல்லவா? இது எவ்வளவு முக்கியமான தஸ்தாவேஜி என்பதைப் படித்துப் பாருங்கள்’ என்றார்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் மிகுந்த மனவெழுச்சியும் ஆவலும் அடைந்து, “ஓகோ அப்படியா அன்றைய தினம் மங்கலான வெளிச்சத்தில் நான் இதைப் பார்த்ததனால், எனக்கு உடனே அடையாளம் தெரியவில்லை. இது ஏதாவது சாதாரணமான கடிதமாக இருக்குமென்று நான் அப்போதே எண்ணிக்கொண்டேன். ஆகையால், அதன்பிறகு இதைப்பற்றிய நினைவே எனக்கு உண்டாகவில்லை’ என்று கூறியவண்ணம் அதை வாங்கிப் பிரித்தார். நீலமேகம்பிள்ளை, ‘'நானும் இதை முதலில் அலட்சியமாக மதித்து, சுமார் இருபது நாள்கள் வரையில் இதைப் படிக்காமல் இருந்துவிட்டேன். இப்போது தான் நாலைந்து தினங்களுக்குமுன் இதைப்பற்றிய நினைவு உண்டாயிற்று. உடனே எடுத்துப் படித்தேன். இதிலிருந்து மகா முக்கியமான சில விஷயங்கள் வெளியாயின. உடனே இதைக் கொண்டுவந்து உங்களுக்குக்காட்டவேண்டுமென்ற ஆவல் என் மனதில் உண்டானது. ஆனாலும் நான் முதலில் வேறே ஒரிடத்திற்கு அவசரமாய்ப் போக வேண்டியிருந்ததால், நான் உடனே இங்கே வரவில்லை’ என்றார்.

அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டே இன்ஸ் பெக்டர் உயிலைப் பிரித்து, அதைத் தமக்குள்ளாகப் படித்து முடித்தார். படிக்கவே அவர் மிகுந்த வியப்படைந்து, ‘ஆம். இதிருக்கட்டும். நீங்கள் இந்த உயிலைப் படித்தவுடன் எங்கேயோ ஓரிடத்துக்கு அவசரமாய்ப் போனதாகச் சொன்னீர்களே! திருவாரூருக்குத் தானே போயிருந்தீர்கள்? முதன் முதலாக உங்களுடைய தங்கை மாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாவது சகஜமே. ஆம், அங்கே போனிர்களே, அந்தப் பெண்களுள் மூத்தவளை நீங்கள் அங்கே