பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 183 கண்டிருக்க மாட்டீர்கள். சிறிய பெண் அங்கே இருக்கிறாள் அல்லவா?’ என்றார்.

அந்த வார்த்தையைக்கேட்ட நீலமேகம்பிள்ளை அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்து, ‘என்ன ஆச்சரியம் ! உங்களுக்குத் தெரியாத விஷயம் இந்த உலகத்தில் ஒன்றும் இருக்காது போலிருக்கிறதே. நீங்கள் தஞ்சாவூரில் இருக்கிறீர்கள்; திருவாரூரில் உள்ளவர்களுடைய சங்கதிகூட உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! உண்மையில் உங்களிடம் தெய்வீகமான ஞானதிருஷ்டி இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்” என்றார்.

இன்ஸ்பெக்டர் சந்தோஷமாகப் புன்னகை செய்து, “நீங்கள் நினைக்கிறபடி என்னிடத்தில் தெய்வீகமான சக்தி எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்த உலகத்திலுள்ள சகலமான விஷயங்களும் எனக்குத் தெரியுமென்று சொல்வதும் சரியல்ல. அந்தப் பெண்களின் விஷயம் தற்செயலாக எனக்குத் தெரிந்தது. இந்த உயிலில் குறிக்கப்பட்டிருக்கும் கமலம், ஷண்முகவடிவு என்ற பெயர்களையும் அவர்கள் இருக்கும் இடம், அநாதரவான நிலைமை முதலிய விவரங்களை உணரவே, இதற்குமுன் தற்செயலாகநான் தெரிந்துகொண்ட பெண்களே இவர்களென்று உறுதி ஏற்பட்டது. அவ்வளவே விஷயம். இதைத்தவிர, நான் ஞானதிருஷ்டியால் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன்

என்று சொல்வது சரியல்ல” என்றார்.

நீலமேகம்பிள்ளை, ‘இந்தப் பெண்களைப்பற்றிய வரலாறு உங்களுக்கு எப்படித் தெரிந்தது? எப்போது தெரிந்தது? நீங்கள் யூகிக்கிறபடி நான் இந்த உயிலைப் படித்தவுடன் அந்த ஊருக்குத்தான் போனேன். இரண்டு பெண்களும் அங்கே யில்லை. அவர்கள் இந்த ஊரிலேயே இருப்பதாகத் தெரிந்தது. ஆகையால், நான் உடனே புறப்பட்டு இன்றைய தினம் காலையில்தான் இங்கே வந்தேன்’ என்றார்.