பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 15

உடனே நீலமேகம் பிள்ளை லீலாவதியை அன்பாகவும் இரக்கமாகவும் பார்த்து, ‘அம்மா! நம்முடைய வண்டிகள் இந்நேரம் திரும்பி வந்திருக்கலாமென்று நினைக்கிறேன். உங்களை ஒரு வண்டியில் வைத்து அனுப்புகிறோம். நீங்கள் முன்னால் உங்களுடைய ஜாகைக்குப் போய்ச் சேருங்கள். நாங்கள் இன்னம் கொஞ்சநேரம் இவ்விடத்திலிருந்து என் தகப்பனாருடைய பிரேதத்தை எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டு அதிக பகிரங்கமில்லாமல் மேற்கு ராஜ வீதியிலுள்ள எங்களுடைய ஜாகைக்குப் போய் ச் சேர வேண்டும்’ என்றார்.

அவர்களது முடிவான சொற்களைக் கேட்ட லீலாவதி அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தவளாய் நீலமேகம் பிள்ளை பிரஸ்தாபித்தபடி தான் முன்னால் போக ஒப்புக் கொண்டாள். உடனே நீலமேகம் பிள்ளையும், இன்ஸ் பெக்டரும் லீலாவதியை அழைத்துக்கொண்டு பங்களாவிற்கு வெளியில் வந்தனர். மூன்று வண்டிகள் வந்து ஆயத்தமாக நின்று கொண்டிருந்தன. அவர்கள் லீலாவதியை ஒரு வண்டியில் உட்காரவைத்து, வடக்கு ராஜ வீதியில் மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகைக்கு ஒட்டிக்கொண்டு போகும்படி வண்டிக்காரனிடம் கூற, அவன் அவ்வாறே வண்டியை ஒட்டிக்கொண்டு செல்லலானான். லீலாவதி தான் துணிந்து நீலமேகம் பிள்ளையிடம் ரகசியங்களை எல்லாம் வெளியிட்டதனால், தனது துன்பங்களெல்லாம் விலகிப் போயினவென்றும், தான் இனி எவ்விதக் கவலையுமின்றி சுயேச்சையாக இருக்கலாமென்றும் நினைத்து மகிழ்ச்சி அடைந்து அளவளாவியவளாய்த் தனது ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தாள். அவ்விடத்தில் மேலே நடந்த விஷயங்களை விவரிக்குமுன் நீலமேகம் பிள்ளை முதலியோர் வெண்னாற்றங் கரையை விட்டு வந்த விவரத்தின் மிகுதியையும் கூறிவிடுவது அவசியமாதலால், அவரைக் கவனிப்போம். பூ.ச.V-2