பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 189 வாசலண்டை வந்த காலத்தில் இந்தக் கலகம் நடந்ததையும் எதிராளிகள் போலீஸ் ஜெவான்களை அடித்துக் கொன்றதையும் கண்டு இன்னும் பல ஜெவான்களை அழைத்துவர வேண்டு மென்ற பதைப்பிலும் ஆத்திரத்திலும் மெய்மறந்து நான் அந்தப் பெண்ணைவிட்டுப் பிரிந்து போய்விட்டேன். அந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு சந்து இருந்தது. அங்கேபோய் ஏதாவது ஒரு வீட்டில் தங்கியிருந்து காலையில் வரும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டேன். இப்போது யோசித்துப் பார்த்தால், நான் அப்படிச் செய்தது தவறெனத் தோன்றுகிறது. கொஞ்ச நேரம் பிடித்தாலும் பிடிக்கட்டுமென்று அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு ஸ்டேஷனுக்குப் போய் அவ்விடத்தில் அவளை இருக்கச் செய்துவிட்டு வந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்போது இவ்வளவு பெரிய ஊரில் நாம் எங்கே போய்த் தேடுகிறது. அந்தப் பெண் சுயேச்சையாக நடமாடக் கூடிய நிலைமையிலிருந்தால், இத்தனை நாள் என்னிடம் வராமல் இருக்கவே மாட்டாள்; அல்லது அவள் திருவாரூருக்காவது போயிருப்பாள். இரண்டும் இல்லாதிருப்பதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை யாரோ எவ்விடத்திலோ கொண்டு போய்ச் சிறை வைத்திருக்க வேண்டுமென்பதே நிச்சயம். கொஞ்சமும் சந்தேகமே இல்லை. நாம் முதலில் அந்தப் பெண்ணைத்தான் தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். -

நீலமேகம்பிள்ளை மிகுந்த கலக்கமடைந்து, ‘இவ்வளவு பெரிய ஊரில், நாம் எங்கேபோய் அவளைத் தேடுகிறது? அவள் காணாமல் போய் ச் சுமார் 25 தினங்கள் ஆகியிருக்கலாம் போலிருக்கிறது. அவளைச் சிறைப்படுத்தியிருக்கிறவர்கள் இந்நேரம் அவளைக் கொன்றாலும் கொன்றிருக்கலாமே ‘ என்றார்.

இன்ஸ்பெக்டர் சிறிது சிந்தனைசெய்து, ‘என்னவோ பார்க்கலாம். நாம் நம்முடைய புத்தியை உபயோகப்படுத்தி