பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iSO பூர்ணசந்திரோதயம் - 5 முயற்சித்துப் பார்ப்போம். முடிவில் காப்பாற்றுவதற்குத் தெய்வம் இருக்கிறது. அந்தப்பெண்ணைக் கடைசியாக நான் விட்டுப் பிரிந்துவந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு சந்து இருந்ததென்று சொன்னேன் அல்லவா? அநேகமாய் அவள் அந்தச்சந்திற்குள்போய் எங்கேயாவது ஒரு வீட்டில் தான் இருக்க வேண்டும். சந்தைத் தவிர பக்கத்தில் வேறே வீடு இல்லை. அந்தச் சந்தின் முனையில் அன்றையதினம் ஜனங்கள் நின்று கொண்டிருந்ததாக எனக்கு நினைவுண்டாகிறது. நான் அங்கே போய் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள மனிதரிடமும் பேசி, கலகம் நடந்த அந்த இரவில் யாராவது பெண்அங்கே வந்தாளாவென்று தந்திரமாக விசாரித்துப் பார்க்கிறேன். அவ்விடத்தில் கிடைக்கும் செய்தியைக்கொண்டு அதற்குத் தக்கபடி நடந்து கொள்வோம். அதுவுமன்றி, இந்த ஊரில் தாசிகள், வேசிகள், தரகு காரிகள் முதலியோர் இருக்குமிடம் எல்லாம் எங்கள் ஜவான்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரிடம் விடாமல், அந்த வீடுகளுக்கெல்லாம் போய், யாராவது வஞ்சகமாக இந்தப் பெண்ணை எவ்விடத்திலாவது கொண்டுபோய் விட்டிருக்கிறார்களா என்று பார்க்கச் செய்கிறேன். அப்படிச் செய்வதில், எவ்விதத் தகவலும் கிடைக்காவிட்டால் முடிவில் இன்னொரு காரியம் செய்து பார்க்கலாம். இந்த ஊரில் சுமார் நூறு தெருக்களும் சந்துகளும் இருக்கலாம். இந்த ஊரில் இருநூறு ஜெவான்கள் இருக்கிறார்கள் தெருவுக்கு இரண்டு பேராக அனுப்பி, ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் போய்த் தந்திரமாகப் பார்த்து விசாரித்துவிட்டு வரச் செய்கிறேன். இதற் கென்று நாம் ஒரு விஷயத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால், நாம் எதிர்பார்க்காத அநேக புதிய தகவல்களும் சூசனைகளும் கிடைக்கும். அவைகளை வைத்துக்கொண்டு நாம் மேல் காரியத்தை நடத்தலாம். நாம் இன்னின்ன காரியங்கள் செய்து இன்னின்னதுறையில் வேலை செய்யவேண்டியது என்பதை இப்போதே நிச்சயிப்பது சாத்தியமான காரியமல்ல. ஓர் அற்ப விஷயத்தை வைத்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்குத்தகுந்தபடி நடந்து நாம் எவ்வளவோ