பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i 95

இன்ஸ்பெக்டர், ‘இன்ன காரணத்தினால் நெருப்புப் பிடித்துக் கொண்டதென்பது தெரியவில்லை. மேன் மாடத்தின் ஒரு பாகம் பற்றி எரிந்து நாசமடைந்துவிட்டது. முன் பாகமும், அதாவது அவரது வெல்வெட்டு மாடமும், கீழ்ப்பாகமும் தப்பித்துக்கொண்டன. நடுஇரவில் மேன்மாடத்தில் திடீரென்று நெருப்புப் பிடித்துக் கொண்டதாம். அப்போது லீலாவதியும், ஜெமீந்தாரும் மேன்மாடத்தில் இருந்தார்களாம். அன்றைய தினம் கீழே வேலைக்காரர்கள் அதிகமாக இல்லையாம். அவருக்கு முக்கியமான காரியஸ்தன் கோவிந்தசாமி என்று ஒருவன் இருக்கிறான். அவன் ஒர் அறையில் படுத்திருந்தானாம். பக்கத்து வீட்டு ஜனங்கள்மேன்மாடத்தில் உண்டான நெருப்பின் வெளிச்சம் தங்கள் வீட்டுமுற்றத்திலும் தாழ்வாரத்திலும் உண்டானதைக் கண்டு சந்தேகித்து எழுந்துவந்து பார்த்து, மேன்மாடத்தில் நெருப்புப் பிடித்துக்கொண்ட சங்கதியைத் தெரிந்து கொண்டு கோவென்று அலறிப் பெருங்கூச்சல் செய்து கொண்டு வெளியில் ஓடிவந்து அவருடைய மாளிகையின் வாசலில் நின்று கூச்சலிட்டனராம். உடனே கோவிந்தசாமி விழித்துக்கொண்டு வெளிக்கதவைத் திறந்துவிட்டவுடன் ஒட்டமாக மேன்மாடத்துக்கு ஒடிப் பார்த்தானாம். கிழவர் விசை வைத்த நாற்காலியொன்றில் அகப்பட்டு மூர்ச்சித்துக் கிடந்தாராம். லீலாவதி காணப்படவில்லையாம். கிழவர் இருந்த இடத்தைச்சுற்றி நாற்புறங்களிலும் நெருப்பு பிரமாதமாக எரிந்து கொண்டிருந்ததாம்; அவன் இன்னம் கொஞ்சநேரம் போகாமலிருந்தால் ஜெமீந்தார் நெருப்பில் ஆழ்ந்து கருகிப் போயிருப்பாராம். அவன் துணிந்து நெருப்பிற்குள் புகுந்து நாற்காலியின் விசையை விலக்கிவிட்டு அவரைத் தூக்கிக் கொண்டு கீழே வந்து விட்டான். அதற்குள் அண்டை வீடுகளிலிருந்த ஜனங்கள் தத்தம் வீட்டில் ஜலத்தோடிருந்த குடங்களை எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் வந்துகூடி ஏணிகளை வைத்துக்கொண்டு ஏறியும், வாசல்களின் வழியாக நுழைந்தும் தண்ணீரைக் கொட்டி ஒரு நாழிகை நேரத்தில்