பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பூர்ணசந்திரோதயம் - 5 அவரும் நீலமேகம் பிள்ளையும் மற்ற இரண்டு வண்டிகளையும் அழைத்துக்கொண்டு பங்களாவிற்குள் சென்று, வண்டிகளைச் சிறிது தூரத்தில் நிற்க வைத்துவிட்டு பிரேதம் இருந்த இடத்தை அடைந்தனர். அவ்விடத்திலிருந்த வைத்தியர் களுள் ஒருவர இன்ஸ்பெக்டரைப் பார்த்து, ‘ஐயா இந்தப் பிரேதத்தை நாங்கள் சோதனை செய்து பார்த்ததில், இவ் விடத்தில் ஒரு காகிதச் சுருள் இருந்தது. அதை எடுத்து இதோ பக்கத்தில் வைத்திருக்கிறோம். இவரைப் புதைத்த காலத்தில் இவருடைய உடம்பில் சட்டை துணி முதலியவைகளும் இருந்திருக்க வேண்டும். இந்தக் காகிதச்சுருளை இவர் சட்டைப் பைக்குள் வைத்திருந்திருக்கிறார் என்றே நினைக்கிறோம்.’ என்றார்.

உடனே இன்ஸ்பெக்டர், ‘ஓகோ அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கூறியவண்ணம் கீழே வைக்கப்பட்டிருந்த காகிதச் சுருளை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அதற்குள் ஒரு தஸ்தாவேஜி மாத்திரம் காணப்பட்டது. அதைப் படிக்கத் தொடங்கி மேலே இருந்த இரண்டொரு வரிகளைப் படித்த இன்ஸ்பெக்டர், அது இறந்துபோன ஜெமீந்தார் தம்முடைய ஜீவ காலத்திலேயே எழுதி வைத்துக்கொண்டிருந்ததமது உயில் பத்திரம் என்பதைக் கண்டு, அதை உடனே நீலமேகம் பிள்ளையிடம் கொடுத்துவிட்டு வைத்தியர்களை நோக்கி, “இந்தப் பிரேதம் ரூபமில்லாமல் ஆற்று ஜலமாக ஓடிக் கொண்டிருக்கிறது, கைகால்களெல்லாம் தனித்தனியாகப் போய் மாம்சக் குவியலாக இருக்கின்றன. இந்த நிலைமையில் நீங்கள் இவர் இறந்துபோன வகை என்ன என்பதையும் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?’ என்றார்.

வைத்தியர், “இந்த நிலைமையில் யாராக இருந்தாலும் உண்மையைக் கண்டுபிடிப்பது துர்லபம்தான். நீங்கள் என்னை அழைத்து இந்தக் காரியத்தைச் செய்யும்படி கேட்டுக் கொண்டதைக் கருதி நாங்கள் அதைத் தடுக்கமாட்டாமல்