பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பூர்ணசந்திரோதயம்-5 நெருப்பை அணைத்துவிட்டனர். அந்த ஜெமீந்தார் ரதிகேளி விலாசம் என்று பெயர் கொடுத்து ஏற்படுத்தியிருந்த இடம் முழுதும் நாசமாகிவிட்டது. அதற்குள்ளிருந்த விசை வைத்த நாற்காலிகளும் இன்னும் அவருடைய மஞ்சங்கள் முதலிய ஏராளமான சாமான்களும் எரிந்து இருந்த இடந்தெரியாமல் கரியாய்ப் போய்விட்டன. ஜனங்களுடைய கடுமுயற்சியால் அந்த மாளிகையின் பெரும்பாகமும், அதிலுள்ள அபாரமான பொருள்களும் மிஞ்சின. ஆனால் அந்த ஜெமீந்தார் உயிரோடு இருக்கிறார். ஆனாலும், அவர் இனி பிழைப்பது கடினமென்று வைத்தியர்கள் சொல்லுகிறார்கள். அவரது உடம் பில் பல இடங்களில் நெருப்பு சுட்டுவிட்டது. உதடுகளில் பெரும்பாகம் நெருப்பில் வெந்துபோய் விட்டது. ஆகையால் அந்தப் புண்ணின் உபத்திரவத்தால் அவர் பேசவும் முடியவில்லை. ஆகாரம் மருந்து முதலியவை சாப்பிடவும் முடியவில்லை. அதுபோல அவருடைய இரண்டு கைகளிலும் நெருப்புப் புண்ணிருப்பதால், அவர் எழுதவும் முடியவில்லை. ஆகையால், எப்படி நெருப்புப் பிடித்துக்கொண்டது, லீலாவதி எங்கே போனாள் என்ற விவரங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. புண்கள் ஆறிக்கொண்டு வருவதாக வைத்தியர்கள் சொன்னார்கள். அவர் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது எனக்கு அவ்வளவு நிச்சயமாகத் தெரியாது. அவருக்கு நேர்ந்த இந்தப் பெரிய அபாயத்தைப் பற்றி நான் அவர் விஷயத்தில் நிரம் பவும் இரங்குகிறேன். ஆனாலும், அவர் ஷண்முகவடிவு முதலிய பதிவிரதா சிரோன்மணிகள் வயிறெரியச் செய்த பாவம் உடனே கைமேல் பலித்துவிட்டதே அன்றி வேறல்ல என்ற எண்ணமும் ஒரு பக்கத்தில் உண்டாகிறது. அநேகமாய் லீலாவதி நெருப்பில் எரிந்து போயிருக்க வேண்டுமென்று எல்லோரும் சொல்லு கிறார்கள்’’ என்றார்.

நீலமேகம்பிள்ளை, “அன்றையதினம் இரவில் வெகுநேரம் வரையில் நம்மோடுகூட இருந்துவிட்டு வந்த லீலாவதிக்கு