பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 பூர்ணசந்திரோதயம் - 5 அவர் என்ன தகவல் தெரிவிக்கிறார் என்பதைக் கேட்க வேண்டுமென்ற எண்ணம் சில தினங்களாக என் மனசிலிருந்து வருகிறது. ஆகையால் நானும், உங்களோடு கூட வருகிறேன் நீங்கள் சொந்த வண்டியில் தானே வந்திருக்கிறீர்கள்?’ என்றார்.

நீலமேகம் பிள்ளை, ‘ஆம்; என்னுடைய ஸ்ாரட்டில் வந்திருக்கிறேன். நீங்களும் வாருங்கள். இரண்டு பேருமாய்ப் போய்ப் பார்ப்போம். எனக்கு அது புது இடமாயிற்றே என்ற கிலேசம் கொஞ்சமிருந்தது. நீங்கள் வருவது நல்லதாயிற்று’ என்றார்.

அதன்பிறகு இன்ஸ் பெக்டர் உயிலை நீலமேகம் பிள்ளையிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிப் பத்திரப் படுத்திக் கொண்டார். உடனே இன்ஸ்பெக்டரும் நீலமேகம் பிள்ளையும் அவ்விடத்தைவிட்டு வெளியில்போய் லாரட்டில் ஏறிக் கொண்டு வடக்கு ராஜ வீதியிலிருந்த மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையை அடைந்தனர். ஜெமீந்தாரது முக்கிய காரியஸ்தனான கோவிந்தசாமி என்பவனே சகலமான பொறுப்பையும் ஏற்று அந்த மாளிகையை ஜாக்கிரதையாகக் காவல் காத்து வந்ததன்றி, நோயாகப் படுத்திருந்த ஜெமீந்தாருக் குரிய சிகிச்சைகளையும் பணிவிடைகளையும் கவனித்து வந்தான். அவன் போலீஸ் இன்ஸ்பெக்டரோடு நன்றாகப் பழகியவன். ஆதலால், அவரைக் கண்டவுடன் நிரம் பவும் பணிவாகவும் மரியாதையாகவும் அவரையும் நீலமேகம் பிள்ளையையும் உபசரித்து மருங்காபுரி ஜெமீந்தார் படுத்திருந்த அறைக்கு அழைத்துக்கொண்டு போனான்.

ஜெமீந்தார் வசதியான ஒரு மஞ்சத்தில் சுகமாகப் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரது உடம்பு முழுதும் நெருப்புச் சுட்டதனால் உண்டான ரணங்களில் மருந்துகள் பூசப்பட்டும், துணிகள் கட்டப்பட்டும் இருந்தன. அவர் நிரம்பவும் தளர்ந்து துரும்புபோல மெலிந்து, முற்றிலும் உருமாறிப் போய் அசைவற்று ஒய்ந்து கிடந்தார். அவரது உதட்டிலிருந்த புண்கள்