பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 199 அப்போதும் ஆறாமல் இருந்தமையால் முகம் வீங்கி இருந்தது. வாயில் துணிக்கட்டு போடப்பட்டிருந்தது. ஆகையால், உண்ணவாவது, பேசவாவது சிறிதும் சாத்தியமில்லாது இருந்தது. ஆனால், அவரது வலது கையில் பட்டிருந்த ரணம் சொற்பமாக இருந்தது. ஆகையால், அது சிறிதளவு ஆறிப் போயிருந்தது. அந்த நிலைமையில் படுத்திருந்த ஜெமீந்தாருடன் கோவிந்தசாமி போய், “எஜமானே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயா வந்திருக்கிறார்கள்’ என்று பணிவாகவும் மெதுவாகவும்

கூறினான்.

அதைக்கேட்டவுடனே கிழவர் தமது கண்களைத் திறந்து கொண்டு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். அவரும் சிறிது தூரத்திற்கு அப்பால் நின்ற நீலமேகம்பிள்ளையும் அவருக்கு நமஸ்காரம் செய்தனர். உடனே இன்ஸ்பெக்டர், ‘உடம்பு ரணங்கள் இன்னும் ஆறவில்லை என்று கோவிந்தசாமி சொன்னான். உதட்டிலிருக்கும் புண்ணினால் ஆகாரத்தை உள்ளே செலுத்த இடைஞ்சல் ஏற்பட்டிருக்கிறதென்று சொன்னான். நான் முன்னே இரண்டு தடவை வந்திருந்த காலத்தில் தாங்கள் பிரக்ஞை தவறி இருந்தீர்கள். ஜாக்கிரதையாகப் பார்த்துச் செளக்கியப்படுத்தும் படி நான் வைத்தியர்களிடம் சொல்லிவிட்டுப் போனேன். இப்போது உடம்பு குணப்பட்டிருக்கிறதா என்று விசாரித்து விட்டுப் போகவேண்டுமென்று வந்தேன். இதோ நிற்பது பவானியம்மாள்புரம் ஜெமீந்தாருடைய குமாரர். தங்களுக்கு நேர்ந்த பொல்லாங்கைக் கேட்டு விசனப்பட்டு நேரில் வந்து பார்த்துவிட்டுப் போவதற்காக இவர்களும் என்னோடு வந்தார்கள். தாங்கள் வாயைத் திறந்து எங்களோடு பேச முடியாதென்பது தெரிகிறது. உங்களுடைய கை சரியாக இருந்தால், எழுத்து மூலமாக தாங்கள் சுருக்கமாய் எங்களுக்கு மறுமொழி சொல்லலாம். முக்கியமாக ஒரு விஷயம் உங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டுமென்பது ஒரு கருத்து. இந்த