பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O3 அவன் என்னைவிட்டுப் பிரிந்து போய் எவ்விடத்திலோ இருந்து வருகிறான். என்னுடைய சலகமான சொத்துகளும் அவனையே சேர வேண்டும். அவன் தன்னுடைய தங்கையான லீலாவதியை வைத்து சவரகூவிக்க வேண்டும். நான் இனி எழுந்து நடமாட இயலாத செயலற்ற நிலைமையில் இருக்கிறேன் ஆகையால், நீங்கள் இருவரும் தயை செய்து லீலாவதியையும் திருடன் கொண்டு போன பொருளையும் எப்படியாவது மீட்டுக் கொணர்ந்து இவ்விடம் சேர்க்க வேண்டும். அந்தக் கலியான ராமன் எங்கேயிருக்கிறான் என்பதை விசாரித்து அவனுக்குச் செய்தி சொல்லி அனுப்பி, அவனை உடனே வரவழைத்து, என்னையும் என்னுடைய சகலமான ஐசுவரியங்களையும் அவனிடம் ஒப்புவித்து விடவேண்டும். இதுதான் உங்களிடம் செய்துகொள்ளும் வேண்டுகோள். அதுவரையில் என் சொத்துக்களை நீங்களும் பார்த்துக்கொள்ள வேண்டும். என் உயிர் போகுமுன் லீலாவதியையும், கலியாணராமனையும் நான் ஒருதரம் பார்த்துவிட வேண்டும். அப்போதுதான் என் ஜீவன் சாந்தமடையும். என் கை நடுங்குகிறது. மயக்கம் வருகிறது. மேலே எழுத முடியவில்லை. இவ்வளவே சங்கதி. என்று கிழவர் எழுதி முடித்தார். உடனே அவருக்கு மயக்கம் உண்டாகி விட்டது. அவர் தமது கண்களை மூடி அப்படியே சாய்ந்து விட்டார். அவரால் எழுதப்பட்ட காகிதத்தை இன்ஸ்பெக்டர் எடுத்துப் படித்துவிட்டு அதை நீலமேகம் பிள்ளையிடம் கொடுக்க, அவரும் அதைப் படித்துப் பார்த்தார். கட்டாரித்தேவன் லீலாவதியைத் தூக்கிப் போயிருக்கிறான் என்பதை உணர அவர்களது தேகம் பதறியது. மனம் கொதித்தது. நீலமேகம்பிள்ளை இன்ஸ்பெக்டரை நோக்கி, ‘இது கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறதே. என்னகஷ்டம் இது? மகா முரட்டுத் திருடனான கட்டாரித்தேவன் இடத்திலா லீலாவதி போய் அகப்பட்டுக் கொண்டாள். என்ன அவளுடைய பொல்லாத வேளை பார்த்தீர்களா?’ என்றார்.