பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O5 யாருக்காவது கொடுத்து விடுங்கள். பெண்பிள்ளைகள் மாத்திரம் தனியாக அங்கேயிருப்பது பிசகு’ என்றார்.

நீலமேகம் பிள்ளை அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார். உடனே இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமியைப் பார்த்துக் கிழவரையும் சொத்துக்களையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிய பின் நீலமேகம்பிள்ளையை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார்.

45-வது அதிகாரம்

கலக்கத்தின் மேல் கலக்கம்

கோலாப்பூரிலிருந்து பலவந்தமாகத் தஞ்சைக்குக் கொணர்ந்து சேர்க்கப்பட்ட கலியாணசுந்தரம் பஞ்சண்ணா ராவால் போடப்பட்ட கடிதத்தைப் பிரித்துப் படித்தான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

நான் தஞ்சையில் இருப்பவன்; உம்முடைய வரலாறுகளும் குண விசேஷங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். உம்மிடம் நான் நிரம்பவும் அன்பு வைத்தவன். உமது rேமத்தில் நான் எப்போதும் கண்ணும் கருத்துமாயிருப்பவன்.

நீர் கோலாப்பூரில் சிறைப்பட்டிருக்கும் செய்தி எனக்கு எட்டியது. அதன்காரணம் இன்னதென்பதையும் நான் தெரிந்து கொண்டேன். நீர் சிறைச்சாலையில் இருக்கையில் அவ்விடத்தில் நடந்த விஷயங்களையும் நான் அறிந்து கொண்டேன். நீர்மகாபரிசுத்தமான நடத்தையும் மேன்மையான குணமும் வாய்ந்தவர் என்பதும் எனக்குத் தெரியும். நீர் சுயநலமெண்ணாத ஜீவகாருண்யத்தைக் கருதி பூனாவிற்குப் போய் அவ்விடத்திலுள்ள பட்டமகிஷிக்கு நேரப் போகிற