பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17 ஒப்புக்கொண்டு எங்களால் ஆனவரையில் பிரயாசைப்பட்டு ஒருவித முடிவிற்கு வந்தோம்; விஷமிட்டதனால் இந்த மரணம் நேர்ந்திருந்தால், இந்த மாமிசத்தின் நிறத்திலும் வாசனையிலும் இருந்தே, அது வெளியாகிவிடும். அப்படிப்பட்ட குறி எதுவும் இல்லை. ஆகையால் விஷமிடப்படவில்லை என்று நிச்சயித்துக் கொண்டோம். இவர் அடிபட்டு இறந்தாரா இல்லையா என்பதை பிரேதம் உருக்குலையாமல் இருந்தாலன்றி மற்றப்படி நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியாது. இந்த மனிதர் எவ்விடத்தில் இறந்தாரோ அவ்விடத்திலேயே இதுவரையில் இருந்திருந்தால் அப்போதாவது நாங்கள் ஒருவிதமாகப் பிரயத்தனப்பட்டு உண்மையைக் கண்டு பிடிக்கலாம். இந்தப் பிரேதம் இரண்டு மூன்று தரம் ஒரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு போகப்பட்டிருப்பதன்றி தாறுமாறாகவும் வைத்து துப்பட்டியால் கட்டப்பட் டிருக்கிறது. ஆகையால், இந்த நிலைமையில் உண்மையைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லாத விஷயம். அந்த ஸ்திரீசொன்ன விஷயங்களையும் இவ்விடத்திலிருந்த சகலமான குறிப்பு களையும் ஒத்திட்டுப் பார்த்துத்தான் உத்தேசமாக நாங்கள் ஒருவித முடிவு சொல்லக்கூடும். அதுபோலவேதான் நாங்கள் இந்த விஷயத்திலும் ஒருவித முடிவுக்கு வந்தோம். நாங்கள் சொன்ன முடிவு தவறாகவும் இருக்கலாம், சரியாகவும் இருக்கலாம். நியாயஸ்தலங்களில் சந்தேகமாக இருக்கும் அம்சங்களை, குற்றவாளிக்கு அனுகூலமாக வியாக்கியானம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஒரு நியாயம் இருக்கிறது ஆகையால், அதற்கிணங்க, நாங்கள் இந்த விஷயத்தை இந்த அம்மாளுக்கு அனுகூலமாகத் தீர்மானித்தோம். உண்மையில் குற்றம்செய்த ஆயிரம் மனிதரைத் தண்டனையில்லாமல் நாம் விட்டுவிடலாம். குற்றமே செய்யாத நிரபராதி ஒருவனைக்கூட தண்டிப்பது மகா பாவகரமான காரியம். ஆகையால், இந்த அம்மாள் சொன்ன விஷயங்களில் எதுவாவது தவறு என்று காட்டக்கூடிய குறியோ அல்லது சாட்சியோ இவ்விடத்தில்