பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பூர்ணசந்திரோதயம் - 5 இங்ஙனம்,

உம்மிடம் சமர்த்தியான பட்சமுள்ள

ஒர் ஆப்தன்.

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த கலியாண சுந்தரம் அப்படியே திடுக்கிட்டு ஸ்தம்பித்து என்ன செய்வ தென்பதை அறியாமல் குழம்பி நின்றுவிட்டான். கடிதத்தில் எழுதப்பட்டுள்ளவிஷயங்களெல்லாம் உண்மையானவை என்ற எண்ணம் தானாகவே அவனது மனதில் உண்டாகிவிட்டது. ஷண்முகவடிவு மருங்காபுரி ஜெமீந்தாரது மாளிகையில் கொண்டுபோய் விடப்பட்டாள் என்ற விஷயமும், அதில் ஒரு பாகம் தீக்கிரையாயிற்று என்பதும், ஷண்முகவடிவு அதனால் இறந்து போயிருப்பாளோ என்ற சந்தேகமும் பேரிடிகள் திடீரென்று வீழ்வதுபோல அவனது மனதில் போய்த்தாக்கின. ஆதலால், அவனது உயிர் போவது போன்ற மகா விபரீதமான உணர்ச்சியை அவன் அடைந்து நெருப்புத் தணல்களுக்குள் புதைக்கப்பட்டவன் போலத் துடி துடிக்கலானான். அவனது அங்கமெல்லாம் கட்டுக்கடங்காமல் பதறித் தவித்தது. மனம் வேதனை என்ற பெருத்த கொடிய கூர்மையான நேரடி ரம்பங்களால் அறுபட்டு நரகபாதை யுற்றது. ஷண்முகவடிவு உயிரோடு இருக்கிறாளோ, தீக்கிரையாய் விட்டாளோ, அல்லது ஜெமீந்தாருடைய மாளிகையில் விசை வைத்த நாற்காலியில் அகப்பட்டுக் கொண்டு பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டி ருப்பாளோ என்ற எண்ணங்களே முக்கியமாக எழுந்து, அவனது இரத்தம் கொதித்துக் கொந்தளித்துப் பொங்கும் படி செய்தன. தாம் அவளை எவ்விடத்தில் போய்த் தேடுவது என்ற கேள்வியே முக்கியமாக எழுந்து துரிதப் படுத்தியது. ஆகையால் தான் பூனாவுக்குப் போக வேண்டு மென்ற நினைவாவது, பட்டமகிஷிக்கு அந்தச் சதியாலோசனையைத் தெரிவித்து அவளை எச்சரிக்க வேண்டுமென்ற எண்ணமாவது உண்டாகவே