பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 213 இல்லை. தான் உடனே மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகைக்குப் போய் அதற்குள் ஷண்முகவடிவு எங்கேயாவது சிறை வைக்கப்பட்டு வேலைக்காரரால் காவல் காக்கப்பட்டி ருக்கிறாளா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆனால், ஜெமீந்தார் நோயாகக் கிடக்கும் நிலைமையில் வேலைக்காரர்கள் அவளை மாளிகைக்குள் வைத்திருக்க மாட்டார்களென்ற நினைவு உண்டானதோடு, அவள் எவ்விடத்திலும் காணப்படவில்லை என்று கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதிலிருந்து, அந்தக் கடிதத்தை எழுதியவர் அவள் மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையில் இல்லையென்பதை நிச்சயித்துக் கொண்டே தன்னை வரவழைத்து இருக்கிறார். ஆதலால், தான் அவ்விடத்தில் போய்ப் பார்ப்பது பலன் தராதென்றும், தான் நேரில் அந்த மாளிகைக்குப் போனால் ஜெமீந்தாரைக் காணும்போது தனக்குத் தன்னை மீறி ஆத்திரம் உண்டாகும் என்றும், ஜெமீந்தார் நோயாகப் படுத்திருக்கையில், தான் அவரிடம் பகைமை பாராட்டுவதைக் கண்டு மற்றவர் சந்தேகம் கொள்வரென்றும் நினைத்த கலியாணசுந்தரம் பரமசங்கடமான அந்த நிலைமையில் தான் என்ன செய்வதென்பதைப் பற்றிக் கால்நாழிகை சாவகாசம் வரையில் ஆழ்ந்த சிந்தனை செய்தான்; அப்போதும் அவனது குழப்பமும் சந்தேகமும் மாறாமலேயே இருந்தன. ஒருகால் ஷண்முகவடிவு மருங்காபுரி ஜெமீந்தா ருடைய மாளிகையிலிருந்து தப்பித்து, திருவாரூருக்குப் போயிருப்பாளோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. ஆகையால், தான் உடனே அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுத் திருவாரூருக்குப் போய் அவ்விடத்தில் அவள் இல்லையா என்பதையும் அவ் விடத்திலுள்ளோர் சொல்லக்கூடிய விஷயங்களையும் தெரிந்துகொண்டு உடனே திரும்பி வந்து தேவையானால் அதற்கு மேல் தான் அந்த மாளிகைக்குள் புகுந்து எல்லா இடங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டவனாய்க் கலியாணசுந்தரம் அவ்விடத்தை