பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பூர்ணசந்திரோதயம் - 5 விட்டு அந்த ஊர்த் தெற்கு ராஜ வீதியிலிருந்த தனது ஆப்த நண்பனொருவனைக் கண்டு தனது வழிச் செலவுக்குத் தேவையான பணம் சிறிதளவு பெற்றுக்கொண்டு வண்டிப் பேட்டையை அடைந்து, திருவாரூருக்குப் பிரத்தியேகமான ஒரு குதிரை வண்டி அமர்த்திக்கொண்டு அதில் உட்கார்ந்து உடனே பிரயாணம் புறப்பட்டான். வண்டியை விரைவாக ஒட்டும்படி அவன் அடிக்கடி வண்டிக்காரனைத் தூண்டியபடி பதறிய தேகமும், கலங்கிய மனதுமாய் வண்டியில் உட்கார்ந்திருந்தான். அவன் வேறு எந்த விஷயத்திலும் தனது கவனத்தையாவது பார்வையையாவது செலுத்தாமல் சித்தப் பிரமை கொண்டவன் போலக் காணப்பட்டான். ஷண்முகவடிவு இறந்து போயிருப்பாளோ என்ற ஏக்கமே ஆறாத்துயரமாகப் பெருகி அவனது உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது. தான் அவளை மறுபடியும் உயிரோடும் கற் போடும் காணக் கிடைக்குமோ என்ற நினைவே ஓயாமல் எப்போதும் அவனது மனதில் எழுந்து சகிக்க இயலாதபடி வதைத்துப் புண்படுத்திக் கொண்டிருந்தது. மிருதுத்தன்மையும், கலியான குணங்களும் நிறைந்த நிஷ்கபடியான ஷண்முகவடிவினிடம் கிழஜெமீந்தார் துர்மோகம் கொண்டதனால் சகிக்கக்கூடாத பிரமாதமான ஆத்திரத்தை உண்டாக்கியது. அந்த உத்தமியின் விஷயத்தில் தீங்கு நினைத்ததற்கு உடனே தண்டனை கிடைத்ததுபோல, அவர் நெருப்பினால் தகிக்கப்பட்டு நோயாகக் கிடக்கிறார் என்ற செய்தி அவர் மீது அவன் கொண்ட கடுங்கோபத்தை ஒருவாறு தணித்தது. ஆனாலும், அவரது விஷயத்தில் அவன் கொண்ட அருவருப்பும், சீற்றமும் அளவிட இயலாதபடி பெருகிக் கொண்டிருந்தன. அத்தகைய கொடிய துன்மார்க்கரது முகத்தில் தான் விழிப்பதே பாவமென்ற ஓர் எண்ணம் அவனது மனதில் உதித்தது. அது நிற்க. தனது விஷயத்தில் அவ்வளவு தூரம் அக்கறை பாராட்டித் தன்னைச் சிறைச்சாலையிலிருந்து தப்ப வைத்துக் கொணர்ந்து எதிரிகளின் ரகசியங்களையும் ஷண்முக வடிவின் விஷயங்களையும் தனக்குக் கடிதத்தின் மூலமாக