பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 217 அப்படியிருக்க, இந்தப் பங்களாவை விற்பது யார்?’ என்று கலியாணசுந்தரம் தனக்குள் பலவாறு எண்னமிட்டுக் கலங்கியவனாய் அவ்விடத்தைவிட்டுத் திருவாரூரை அடைந்து, தனது சொந்த வீட்டிற்குப் போய்ப் பார்த்தான். அதன் வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த வீட்டுக்காரர்களைக் கண்டு கேட்க, அவர்கள் அவனது வேலைக்காரியும், அவளோடு தஞ்சையிலிருந்து வந்த ஒரு சிறிய பெண்ணும், வந்தவுடனே நீலலோசனியம்மாளுடைய பங்காளவிற்கே போய்விட்ட தாகவும், அதன்பிறகு அங்கே திரும்பி வரவே இல்லை என்றும் கூறினர். உடனே கலியாணசுந்தரம் நீலலோசனி அம்மாளுடைய பங்களா ஏலத்தில் விடப்படும் விஷயமாக ஏதாவது தகவல் அவர்களுக்குத் தெரியுமாவென்று விசாரிக்க, அவர்கள் அதைப் பற்றித் தமக்கு அதிக விவரமொன்றும் தெரியாதென்றும், தஞ்சையிலுள்ள யாரோ ஒரு ஜெமீந்தார் அதை ஏதோ ஒரு தேதியில் ஏலத்தில் விடப்போவதாக தண்டோரா போடப்பட்டதென்று ஜனங்கள் சொல்லிக் கொண்டனரென்றும் தெரிவித்தார்கள். அந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்ட கலியாணசுந்தரம் திருவாரூரை விட்டு மறுபடி தஞ்சைக்குப் பிரயாணமானான். அவனது மனக் குழப்பம் வரவர அதிகரித்ததே அன்றிக் குறைவதற்கு ஏதுவில்லாமல் இருந்தது. தான் ஷண்முகவடிவினிடம் பேசிக்கொண்டிருந்த காலத்தில், அவள் தங்கள் மூவரையும் தவிர வேறே உறவினர் யாரும் தங்களுக்கு இல்லையென்று சொன்னது நன்றாக நினைவிருந்தது. ஆகையால், அப்போது யாரோ ஒரு ஜெமீந்தார் அந்தப் பங்களாவை விற்கப் போகிறார் என்ற செய்தியானது நிரம் பவும் விந்தையாக இருந்தது. மறுபடியும் குதிரை வண்டி நிரம் பவும் துரிதமாகவே ஓடி சீக்கிரத்தில் தஞ்சையை அடைந்தது. அதற்குமேல் தான் என்ன செய்வதென்பதைப் பற்றி கலியாணசுந்தரம் வெகு நேரம் வரையில் ஆழ்ந்து சிந்தனை செய்தான். அந்த நிலைமையில்,