பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 219 வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. தான் எப்படியும் கமலத்தைக் கண்டு ஏதாவது உபயோகமுள்ள செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம் என்பதையே அவன் கடைசி நம்பிக்கை யாக வைத்திருந்தான். ஆகையால், அவ்விடத்திலும் தனது எண்ணம் பலியாமல் தடைப்பட்டுப்போனதைக் காண, தான் பெருத்த துரதிருஷ்டசாலியென்ற எண்ணம் உண்டானது. ஆகையால், தான் பிறந்த வேளையை நிரம் பவும் நொந்து கொண்டான். தான் செய்யும் முயற்சிக்கெல்லாம் எதிர்பாராத ஏதோ ஒர் இடைஞ்சல் குறுக்கிடுவதையும் தனது எண்ணம் நிறைவேறாமல் போவதையும் நினைக்க நினைக்க, அவன் முற்றிலும் தளர்வடைந்து சகிக்கவொண்ணாத ஏக்கமும் துயரமும் அடைந்து, அப்படிப்பட்ட துர்ப்பாக்கியவானாகிய தான் உலகத்தில் ஏன் ஜென்மமெடுக்க வேண்டுமென்று தன்னைத் தானே வைது அருவருத்து அந்த நிலைமையில் தான் இருப்பதைவிட இறப்பதே உசிதமானதென்று நினைத்துப் பெரிதும் கலங்கி, தான் அதற்குமேல் என்ன செய்வது எங்கே போவது என்பதை நிச்சயிக்கமாட்டாதவனாய்த் தயங்கி அந்த மாளிகையின் வாசலிலேயே சிறிதுநேரம் நிற்க அவனது மனதில் ஒரு யோசனை தோன்றியது. அந்த வீட்டின் சொந்தக்காரரான சோமசுந்தரம் பிள்ளை கமலத்தை அழைத்துக் கொண்டு எங்கேயாவது காரியார்த்தமாகப் போயிருப்பாரோ என்றும், அவர்கள் ஒருவேளை சீக்கிரமாகத் திரும்பிவந்து விடுவார்களோ என்றும் ஒரு யோசனை தோன்றியது. பக்கத்திலிருந்த வீட்டு மனிதரிடம் விசாரித்துப் பார்த்தால், திருவாரூரில் கிடைத்த மாதிரி ஏதாவது செய்தி கிடைக்காதா என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டவனாய்,கலியாணசுந்தரம் அவ்விடத்தை விட்டுப் பக்கத்து வீட்டை அடைந்து, அதன் சொந்தக்காரரைக் கண்டு, ‘ஐயா அடுத்த வீட்டு மனிதர் எங்கே போயிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று பணிவாகவும் நயமாகவும் வினாவினான்.