பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பூர்ணசந்திரோதயம்-5 வீட்டுக்காரன் ஆச்சரியத்தினால் புன்னகை செய்த முகத்தினனாய், ‘நீர் சொல்வது விநோதமாக இருக்கிறதே! சோமசுந்தரம் பிள்ளை என்பவர் எந்தத் தெருவில் எந்த இலக்கமுள்ள வீட்டில் இருப்பதாக அந்தப் பெண் உங்களுக்கு எழுதினாள்?’ என்ற ான்.

கலியாணசுந்தரம், “சக்காநாயக்கர்தெரு 13வது இலக்கமுள்ள வீட்டில் இருப்பதாக அந்தப் பெண் எழுதினாள். அது பக்கத்து வீடுதானே? அதைப்பற்றி சந்தேகமில்லையே?’ என்றான்.

வீட்டுக்காரன், ‘ஆம்; அது பக்கத்து வீடுதான். நீர் நேரில் வந்து பார்த்தது ஒருவேளை வேறே வீடாக இருக்குமோ என்னவோ?’ என்றான். -

கலியாணசுந்தரம், ‘இல்லையே! இதே வீட்டுக்குத்தானே நான் வந்தது. நன்றாக நினைவிருக்கிறதே. அந்தப்பெண்ணை யும் நான் இதில்தானே கண்டேன்’ என்றான்.

வீட்டுக்காரன் “நீர் அப்போது அந்த சோமசுந்தரம் பிள்ளை என்ற மனிதரை நேரில் கண்டீரா?” என்றான்.

கலியாணசுந்தரம், ‘இல்லை. அவர் உள்பக்கத்தில் கடுமையான நோயாய்ப் படுத்திருப்பதாக அந்தப் பெண் சொன்னாள்’ என்றான்.

வீட்டுக்காரன், “சரி, இதில் ஏதோ சூதிருக்கிறது. அந்த வீட்டைப் பற்றிய விவரமெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். அதில் அம்மணிபாயி என்ற மகாராஷ்டிர ஸ்திரிநெடுங்காலமாக் வசித்து வருகிறாள். அவள் நிரம்பவும் டீக்காக இருப்பாள். அரண்மனையைச் சேர்ந்த இளவரசர் முதலிய பெரிய மனிதர்கள் எல்லோரும் அவளுக்குக் குலாமாக இருக்கிறார்கள். அவளிடம் உங்கள் பெண் வந்து ஒரு வேளை சிக்கிக் கொண்டிருக்கலாம். சோமசுந்தரம் பிள்ளையிடம் இருப்பதாக எழுதி இருப்ப தெல்லாம் பொய்யாகத்தான் இருக்க வேண்டும். அந்தப்