பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 225 பெண்ணையும் அவள் தன்னுடைய துறையில் திருப்பிக் கெடுத்திருப்பாள். இனி அந்தப் பெண் நல்ல மாதரியாக உங்களிடம் வந்து சேருவாளென்று நான் நினைக்கவில்லை’ என்றான்.

கலியாணசுந்தரம், ‘ஐயா! நீங்கள் சொல்வதைக் கேட்க, எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மைதானா சோமசுந்தரம் பிள்ளையென்று யாரும் இல்லையா? இதில் இருப்பது தாசிதானா? இவர்கள் என்ன காரணத்தினால் இப்போது அரண்மனைக்குப் போயிருக் கிறார்கள் என்பதும், எப்போது திரும்பி வரக் கூடுமென்பதும் உங்களுக்குத் தெரிந்தால், தயை செய்து சொல்லுங்கள் என்று நிரம் பவும் உருக்கமாகவும் குழப்பத்தோடும் கூறினான். வீட்டுக்காரன், ‘நான் சொல்வது பிரமாணமான விஷயம். இதில் அம்மணிபாயி என்ற மகாராஷ்டிர ஸ்திரீதான் இருக்கிறாள். அரண்மனையில் இளவரசருக்கு இன்றையதினம் கலியான மாம். அதற்காக இவர்கள் எல்லோரும் போயிருக்கலாம். எப்போது வருவார்கள் என்பதை நான் நிச்சயமாகச் சொல்லமுடியாது” என்றான். -

&

அதைக் கேட்ட கலியாணசுந்தரம் திடுக்கிட்டு, ‘என்ன! என்ன இளவரசருக்குக் கலியாணமா? அவருக்கு இதற்குமுன் கலியாணம் ஆகவில்லையா?” என்றான்.

வீட்டுக்காரன், ‘ஆம்; இந்த ஊர் இளவரசருக்குத்தான் மறுபடியும் கலியாணம் ஆகிறது. அது ஒரு பெரிய கதை. அதையும் நீர் தெரிந்துகொள்ள வேண்டுமானால் சொல்லு கிறேன்’ என்றான்.

கலியாணசுந்தரம், ‘சொல்லுங்கள்; தெரிந்து கொள்ளலாம்” என்றான்.

வீட்டுக்காரன், “இந்த ஊர் இளவரசர் பூனா தேசத்து மகாராஜனுடைய மகளை சாஸ்திரப்படி கலியானம் செய்து