பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 மூட்டையாகக் கட்டி ஒரு வண்டியில் வைக்கப்பட்டது. அதே வண்டியில் மூட்டைக்குக் காவலாக கூலியாட்கள் உட்கார்ந்து கொண்டனர். அவர்கள் குழியை அதற்குள் மூடிவிட்டு வந்திருந்தனர். இன்னொரு வண்டியில் மற்றவர்கள் உட்கார்ந்து கொண்டனர்.

உடனே வண்டிகளிரண்டும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு விரைவாக ஒடி ஒரு நாழிகை சாவகாசத்தில் தஞ்சை மேற்கு ராஜவீதியிலிருந்த நீலமேகம்பிள்ளையின் மாளிகையை அடைந்தன. பெரிய ஜெமீந்தாரினது பிரேதத்தை எடுத்துவர நீலமேகம்பிள்ளை வெண்ணாற்றங்கரைக்குப் போயிருக்கிறார் என்பது அந்த மாளிகையிலிருந்த வேலைக்காரர்களுக்கெல்லாம் தெரிந்திருந்ததால், அவர்களெல் லோரும் மாளிகையின் வாசலில் ஆயத்தமாகக் காத்திருந்தனர். வண்டிகள் போய் நின்ற உடனே வேலைக்காரர்கள் எல்லோரும் ஒன்றுகூடி பிரேதத்தை இறக்கி மாளிகைக்குள் கொண்டு போயினர். மறுநாள் பொழுது விடிந்தவுடனே முக்கியமான சில உறவினர்களை மாத்திரம் வருவித்து வைத்துக்கொண்டு அதிக ஆடம்பரமில்லாமல் பிரேதத்தை மயானத்துக்குக் கொண்டு போய்க் கொளுத்திவிட வேண்டுமென்று நீலமேகம் பிள்ளையும் இன்ஸ்பெக்டரும் தீர்மானம் செய்துகொண்டனர். தாம் அப்போது தமது வீட்டிற்குப் போய்விட்டு மறுநாட் காலையில் திரும்பவும் வருவதாக இன்ஸ்பெக்டர் நீலமேகம் பிள்ளையிடம் கூறி விடை பெற்று வைத்தியர் இருவரையும் அழைத்துக்கொண்டு போய் விட்டார்.

நீலமேகம்பிள்ளை அப்போதே சில ஆட்களை அனுப்பித் தமது நெருங்கிய பந்துக்களான சிலருக்கு அந்தச் செய்தியை அறிவித்து வரும்படி செய்ததன்றி, அந்த இரவு முழுதும் தூங்காமல் விசனத்தில் ஆழ்ந்திருந்தார். பொழுது விடிந்தது. அவரது முக்கியமான பந்துக்களும் நண்பர்களும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் வந்து சேர்ந்தனர். கொட்டு முழக்கு முதலிய