பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229 பிராணனை விட்டாலும் விடுவாள் என்ற அச்சமும் எழுந்தது. அதுவுமன்றி, தான் ஷண்முகவடிவை மணந்தபிறகு அவளது அக்காள் தாசித் தொழில் செய்கிறவள் என்பதை உலகத்தோர் அறிந்தால், அதனால், தனக்கும் ஷண்முகவடிவிற்கும் பெருத்த மானக்கேடும் தலைகுனிவும் ஏற்படுமே என்ற கவலையும் எழுந்து அவனது மனதைப் புண்படுத்திப் பெரிதும் உலப்பத் தொடங்கியது. ஒருகால் கமலம் அதுவரையில் பரிசுத்தமாக இருக்கக்கூடாதாவென்றும், தான் அவளுக்கு நற்புத்தி புகட்டி அவளை அழைத்துக்கொண்டு போய் திருவாரூரில் வைத்து அவளைத் தக்க ஒரு மனிதருக்குக் கலியாணம் செய்து சன்மார்க்கத்தில் திருப்பிவிடும்படி கடவுள் செய்யமாட்டாரா என்றும் அவன் எண்ணிக் கலங்கியுருகினான். ஆகவே, தான் அவளைத் தேடுவதை அவ்வளவோடு நிறுத்தக் கூடாதென்றும், தான் அந்த ஊர் அரண்மனைக்குப் போய் சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டின் சொந்தக்காரியான அம்மணிபாயி எங்கே இருக்கிறாள் என்று விசாரித்து, அவளைச் சந்தித்து, அவளிடம் நயந்து வேண்டி கமலத்தை விடுவித்துக்கொண்டு போகவேண்டுமென்ற தீர்மானத்தை அவன் செப்து கொண்டான். தனது உயிர் நிலையான ஷண்முகவடிவு எங்கே போயிருப்பாள் என்ற கவலையும் அபாரமாக இன்னொரு புறத்தில் வருத்தியது. ஆன்ால், கமலம் அவளையும் வரவழைத்துத் தனது துறையில் செலுத்தவில்லை என்பது நிச்சயமாக விளங்கியது. எப்படியெனில் அவளது அத்தை திருவாரூரிலிருந்து எடுத்துக்கொண்டு வரப்பட்டவள், அந்த 13வது இலக்கமுள்ள வீட்டில் இல்லை. ஆதலால், அது ஷண்முக வடிவு கமலத்தினிடம் வந்து சேரவில்லை என்ற நினைவு உண்டாக்கியது. எனவே ஷண்முகவடிவு முதலியோர் காணாமல் போனவகை என்ன? அவர்கள் எங்கே போயிருப்பார் கள் என்ற ஐயங்கள் எழுந்து ஓயாமல் வதைத்துக் கொண்டி ருந்தன. -