பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பூர்ணசந்திரோதயம்-5

அந்த இரண்டு பெண்களைப் பற்றிய நினைவுகளையும் கவலைகளையும் விடப் பன்மடங்கு அதிக உரமாக, பூனாவிலுள்ள லலிதகுமாரிதேவியைப் பற்றிய கவலையும் இரக்கமும் எழுந்து அவனது மனதை இளக்கி உருகச் செய்தன. அம்மன்பேட்டைக் கூத்தாடிப் பெண்கள் பூனாதேசத்திற்குப் போய்த் தமது சதியாலோசனையை முடிவு வரையில் நிறை வேற்றி பட்டமகிஷி விபசாரி என்று இளவரசர் நம்பும்படி சூழ்ச்சிகள் செய்துவிட்டனர் என்றும், பட்டமகிஷி உண்மை யிலேயே அவ்வாறு நடந்திருக்க மாட்டாளென்றும், அவள் கர்ப்பிணியாக இருக்கமாட்டாளென்றும், அவன் உறுதியாக நினைத்தான். சில வஞ்சகரின் சூழ்ச்சியினால் இளவரசர் ஏமாறிப்போய், லலிதகுமாரிதேவி துன்மார்க்கி யென்று நம்பி அவளை விலக்கி வேறு கலியாணம் செய்து கொள்ளுகிறார் என்று கலியாணசுந்தரம் எண்ணினான். ஆகவே, தான் அந்த அபாய சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்று ஆழ்ந்து சிந்திக்க லானான். அந்தச் சதியாலோசனையைத் தடுக்க வேண்டு மென்றும் இளவரசியை எச்சரிக்க வேண்டுமென்றும், தான் முயற்சித்ததும் தானும் ஷண்முகவடிவும் பட்டபாடுகளும் பலன்தராமல் போயினவே என்றும் அவன் எண்ணி ஏங்கினான். தான் உடனே பூனாவிற்கு ஆளையனுப்பியோ, நேரில் சென்றோ அப்போதாவது பட்டமகிஷியை எச்சரித்து நேரில் அழைத்து வரலாமென்பதற்கும், பூனாதேசம் தொலைதூரத்தில் இருந்தது. ஆகையால், கலியாணம் அன்றைய தினம் நடக்க ஏற்பாடு ஆகி இருந்ததாலும் அந்த யோசனை சாத்தியமானதாகத் தோன்றவில்லை. தான் நேரில் போய் இளவரசரைக் கண்டு லலிதகுமாரி தேவியின்மேல் சொல்லப்படும் அவதூறு பொய்யானதென்றும், அந்த ராணி பரிசுத்தமானவளென்றும் சொன்னால், அதை அவர் உடனே ஏற்றுக்கொள்வதற்கு தன்னிடம் தக்க சாட்சியம் எதுவும் இல்லையே என்ற கவலை உடனே எழுந்து அவனது மனதை உலப்பத் தொடங்கியது. அந்தச் சந்தர்ப்பத்தில் சிவபாக்கியம் என்ற கூத்தாடிப்