பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233 அவளது மன ஊக்கமும் மகிழ்ச்சியும் சடேரென்று தணிந்து போயின. முன் பலதடவைகளில் தனக்கு நேர்ந்த அபாயங்களை எல்லாம் விடப் பன்மடங்கு பெரிதான அவகேட்டில் அகப்பட்டுக் கொண்டதாக அவள் உணர்ந்தாள். அவளது மனதில் பெருத்ததிகிலும் கலக்கமும் குபிரென்று கிளம்பின. கை கால்களெல்லாம் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்தன. தேகம் கட்டிலடங்காமல் பதறிப்பறந்தது. அடிவயிற்றில் இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித சஞ்சலமும் சங்கடமும் பெருகி நிறைந்து வதைக்கத் தொடங்கின; அவள் என்ன செய்வதென்பதை அறியாமல் வேடரது வலைக்குள் சிக்கிய மான் கன்றுபோல மருண்டு மருண்டு நாற்புறங்களிலும் தனது பார்வையைச் செலுத்தியவளாய்த் தனது கைகளைப் பிசைந்துகொண்டு நின்று தத்தளிக்கலானாள். நெருப்பினால் தான் தன்னைச் சுட்டுக்கொண்டதனால் ஏற்பட்ட பெருத்த அபாயத்திலிருந்து தன்னை மீட்டு, தனது உயிரைக் காப்பாற்றி முற்றிலும் வாஞ்சையாகத் தன்னை நடத்தி அத்தனை நாட்கள் வைத்திருந்த ஹேமாபாயி அப்படியும் தன் விஷயத்தில் சதி செய்வாளோ என்ற சந்தேகமே அவளுக்குப் பெரிதாக இருந்தது. ஆகையால், தான் காண்பது கனவாக இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றியது. தன் விஷயத்தில் அத்தகைய கபட நினைவைக் கொண்டிருந்த ஹேமாபாயி அத்தனை நாட்கள் வரையில் தான் சிறிதும் சந்தேகங்கொள்ளாதபடி நிரம்பவும் திறமையாக நடந்துகொண்டது அவளால் தாங்க இயலாத அதியாச்சரியகரமான செய்தியாக இருந்தது. முடிவு வரையில் விஷயத்தை வெளிப்படுத்தாமல் இருந்தே அவள் நிரம்பவும் தந்திரமாகத் தன்னை ஏமாற்றிவிட்டாளே என்ற மலைப்பும், ஹேமாபாயி கபடமே வடிவாக வந்த மகா கொடிய வஞ்சகி என்ற நினைவும் நமது பெண்ணரசியின் மனதில் தோன்றின. கமலத்தைப் பற்றித் தான் சொன்ன வரலாறுகளை வைத்துக் கொண்டே அவர் தன்னை ஏமாற்றியிருக்கிறாள் என்பதும் சுலபத்தில் விளங்கியது. ஆகவே, கமலம் போன வகையென்ன