பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 235 ஜெகஜ் ஜோதியாகவும் கண்கொள்ளாத ஒரே எழில் நிறை வாகவும் நின்றாள். ஆதலால், இளவரசரது ஐம்புலன்களும் அறிவும் நிலைகலங்கி வெறிகொண்டு பரவசமடைந்து தாங்க வொண்ணா இன்பதுன்பங்களை அடைந்துநின்றன. அவளிடம் என்ன பேசுவதென்பதை அறியாமல் இரண்டொரு விநாடி நேரம் பிரமித்து மெளனமாக நின்ற இளவரசர், “பெண்ணே ஏன் அங்கே போய்க் கம்பத்தில் மறைந்து கொள்ளுகிறாய்? இப்படி வா; உன்னுடைய பெயரென்ன?’ என்று உருக்கமாகவும்

வாஞ்சையாகவும் மொழிந்தார்.

அதைக்கேட்ட ஷண்முகவடிவின் உயிர் தள்ளாடியது. தேகம் தத்தளித்தது. அவருக்கு எவ்விதமான மறுமொழி கொடுப்பது என்பதை அறியாமலும், நாணம் மேலீட்டினால் வாயைத் திறக்கமாட்டாமலும் குன்றிக்குறுகி நின்றாள்.

இளவரசர் தமது முகத்தில் முன்னிலும் அதிகரித்த மகிழ்ச்சியும், புன்முறுவலும் வருவித்துக்கொண்டு மேலும் பேசத் தொடங்கி, ‘பெண்ணே! ஏன் இப்படி நாணுகிறாய்? பயப்படாதே! வா இப்படி; உன் முகத்தழகை நான் நன்றாகப் பார்க்கக்கூடாதென்று கீழே குனிந்து கொள்கிறாயா? ஆகா! நான் பிறந்ததற்கு இதுதான் சுபதினமென்று நினைக்கிறேன். இன்றைய தினந்தான் நான் பிறந்த பயனைப் பூர்த்தியாக அடைகிறேன். நானும் இதுவரையில் கோடானு கோடி யெளவன ஸ்திரீகளைப் பார்த்திருக்கிறேன். கடைசியாக இதோ மேன்மாடத்தில் பூர்ணசந்திரோதயமென்ற ஒரு ராஜகுமாரியும் இருக்கிறாள். இந்த உலகத்தில் அந்தப் பூர்ணசந்திரோதயந்தான் சகலமான அம்சங்களிலும் சிரேஷ்டமான பெண் சிருஷ்டி என்று நினைத்திருந்தேன். இப்போது உன்னைப் பார்த்தபிறகு அந்த அபிப்பிராயம் தானாகவே பறந்து போய்விட்டது. அவளைவிட நீ இன்னம் பதினாயிரம் மடங்கு சிரேஷ்டமானவளாக இருக்கிறாய் என்பது நீ குனிந்து நிற்கும் அந்தப் பணிவிலேயே தெரிகிறது. ஆகா! பெண்களுக்கு எவ்வளவு சிரேஷ்டமான