பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239 சாமானைப் பின்னவருக்குக் கொடுக்க முடியாதல்லவா? வாக்குறுதி பெரிதே அன்றி, பணம் பெரிதல்ல அல்லவா? அதுபோல, எந்த விஷயத்திலும் மனிதர் ஒரு நிர்ணயத்திற்குக் கட்டுப்பட வேண்டுமல்லவா? ஒருவருக்கு என்னைக் கட்டிக் கொடுப்பதாகத் தீர்மானம் ஆனபிறகு, இன்னொருவர் லட்சம் கோடிபணம் கொடுக்கிறாரென்றாவது, அல்லது, அவர் இந்தத் தேசத்தையே ஆளும் மகாராஜனாய் இருக்கிறார் என்றாவது, வேறு பலவகைப்பட்ட மேலான யோக்கியதைகள் உடைய வராய் இருக்கிறார் என்றாவது நினைத்து, முதல் ஏற்பாட்டை மாற்றுவது நியாயமாகுமா? அப்படி நடப்பதென்றால், உலகம் ஒரு கட்டுப்பாட்டில் நிற்குமா? ஒவ்வொரு ஸ்திரீயும் தனக்குக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நிறையில் நிற்க வேண்டாமா? நீங்கள் இப்போது சொன்னீர்களே. பூர்ணசந்திரோதயம் என்ற ஒரு ராஜகுமாரியைத் தாங்கள் சில தினங்களில் மணக்கப் போவதாகச் சொன்னீர்கள் அல்லவா? உங்களைக் காட்டிலும் பன்மடங்கு பெரிய சக்கரவர்த்தியின் குமாரர் ஒருவர் நாளைய தினம் வந்து தம்மை மணந்து கொள்ளும் படி அந்த ராஜ குமாரியிடம் பிரஸ்தாபிப்பது நியாயமாகுமா? அது தங்கள் மனசுக்கு எப்படி இருக்கும்? அந்த ராஜகுமாரி தங்களிடம் ஒரே உறுதியாக இருப்பவளாக இருந்தால் அவளுடைய மனசுக்குத் தான் அந்தப் புதிய பிரஸ்தாபம் எப்படி இருக்கும்? அவளுக்கும் உங்களுக்கும் தான் கலியாணம் இன்னம் முடிவடைய வில்லையே என்று நியாயத்தை அந்தச் சக்கரவர்த்தி குமாரர் எடுத்துச் சொன்னால் அதை நீங்கள் இருவரும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களல்லவா? அதுபோல பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், மகாராஜனாக இருந்தாலும், கேவலம் தோட்டியாக இருந்தாலும், நியாயம் ஒன்றுதானே. எனக்கு ஏற்படுத்தப்பட்ட கணவர்சாதாரண மனிதர், தாங்கள் மகாராஜா என்கிற காரணத்தை ஒர் ஆதாரமாகக் கொண்டு எங்களுடைய ஏற்பாட்டை மாற்றும்படி தாங்கள் சொல்வது நியாயமாகாது” என்றாள். ஆ.ச.V-16