பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 241 நாளைக்கு என்னைவிட மேலானவள் வந்தால், இப்போது சொல்லும் உறுதி பறந்துபோய்விடும் போலிருக்கிறது. தாங்கள் வசிக்கும் ஸ்தானத்துக்கு இது கொஞ்சமும் பொருந்தாத காரியம். தங்களுக்கு அபாரமான செல்வமும் செல்வாக்கும் இருப்பதால், அமிதமான தேகக் கொழுமையினால், பல ஸ்திரீகளின் மேல் துர்மோகம் ஏற்படுவது சகஜமே. அதையெல்லாம் அடக்கி ஒரு நிறையில் நிற்பதுதான் மேன்மையான குணம். அதுதான் ஏழைகளுக்கும் தனிகர்களுக்கும் உள்ள வித்தியாசம், சாதாரண மனிதர்கள் நிறைகள் நிற்பதற்கு, ஏழ்மைத்தனமும், இல்லாமை யுமே ஒரு முக்கியமானதுண்டுகோலாக இருக்கின்றன. பெரிய மனிதர்களிடமுள்ள அமிதமான செல்வாக்கும், செல்வமும், மனத்துணிவும் அவர்கள் பல விஷயங்களில் துராசை கொண்டு மீறி நடப்பதற்குத் தூண்டுகோலாக இருக்கின்றன. ஏழைகள் இல்லாக் கொடுமையினால் எவ்வளவு பாடுபட்டுத் தமது உடம்பை அடக்குகிறார்களோ, அதுபோலத் தங்களைப் போன்றவர்கள் வரம்பு மீறி அக்கிரமமான வழிகளில் செல்லாமல் தங்களுடைய மனசை அடக்க வேண்டும். இது சாதாரண மனிதருள் பெரும்பாலோர் பின்பற்றும் ஒழுங்கே அன்றி ஏட்டுச் சுரைக்காய் அல்ல. நான் எவ்வித கபடமான எண்ணத்தையும் மனசில் வைத்துக் கொண்டு தங்களிடம் வஞ்சகமாகப் பேசுவதாக எண்ண வேண்டாம். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நான் மனப்பூர்வமாகச் சொல்லுகிறேனே ஒழிய வேறல்ல. தாங்கள் பூர்ணசந்தி ரோதயத்தை வேண்டுமென்று தள்ளினாலும் சரி, அல்லது, இந்த ராஜ்யத்தை எனக்கே தானம் செய்தாலும் சரி, அல்லது குபேரனுடைய சம்பத்தைக் கொணர்ந்து எனக்குக் கொடுத்தாலும் சரி, அவைகளைக் கருதி நான் என்னுடைய வாக்குறுதியை மீறவும் மாட்டேன்; எனக்கு ஏற்படுத்தப்பட்ட புருஷரைவிட்டு அன்னியரை நாடவும் மாட்டேன். இதைத் தாங்கள் பிரமாணமாக எண்ணிக் கொள்ளலாம். நான் பரம ஏழை. தங்களுக்கு நான் ஒரு பொருட்டல்ல. என்மேல் தாங்கள்