பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பூர்ணசந்திரோதயம்-5 செலுத்தி முன்பக்கத்தால் கீழே இறங்குவதற்கு ஏதாவது வழி இருக்கிறதாவென்று பார்த்தாள். அந்த இடத்தில் ஏழு உப்பரிகைகள் ஒன்றன்மேல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தன என்பது முன்னரே சொல்லப்பட்டதல்லவா? ஒவ்வொன்றிலி ருந்தும் சாக்கடைத்தண்ணிர் கீழே போவதற்காக துடைப்பரும னுள்ள தகரக் குழாய்கள் உச்சிமுதல் தரைவரையில் பதிக்கப் பெற்றிருந்தன. சுவரில் பொருத்தப் பெற்றிருந்த இரும்பு வளையங்களுக்குள் அந்தக் குழாய்கள் சொருகப் பெற்றிருந்தன. அதைக் கவனித்தவுடன் ஷண்முகவடிவின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. அவள் நின்ற இடத்திற்கு அருகிலிருந்து ஒரு குழாய் கீழே இறங்கியது. அந்தக் குழாயைப் பிடித்துக் கொண்டு தான் மெதுவாகக் கீழே இறங்கிப் போய்விடவேண்டு மென்ற தீர்மானத்தை அவள் செய்துகொண்டாள். ஒருகால் கைவழுக்கித்தான் விழுந்தாலும், அப்படியே மாண்டுபோவதே நல்லதென்று அவள் முடிவு செய்து கொண்டாள்.

சிறிதுநேரத்தில் அவளுக்குத் தேவையான போஜனம் வந்தது. அதை உண்பவள்போல நடித்து அந்த வேலைக்கரரியை அனுப்பி விட்டு அந்த அறையின் கதவுகளை எல்லாம் உட்புறத்தில் தாளிட்டுக்கொண்டு முன்பக்கத்திலிருந்த திறப்பை அடைந்து தனது ஆடைகளை வரிந்து கட்டிக்கொண்டு, ‘சுவாமி! தெய்வமே! நீதான் துணை இதோடு என்னை உன் பாதார விந்தத்தில் சேர்த்துக்கொண்டாலும் சரி, காப்பாற்றினாலும் சரி’ என்று ஈசுவரனைத் தியானம் செய்து கொண்டவளாய் கீழே சென்ற தகரக்குழாயைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கத் தொடங்கினாள். அவளது கைகால்களெல்லாம் வெடவெட வென்று ஆடத் தொடங்கின. உடம்பிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வழிகிறது. கை வழுக்குகிறது. தகரக் குழாய் வெகு காலத்திற்கு முன் பொருத்தப்பட்டது. ஆகையால் கடகட வென்று ஆடத் தொடங்கியது. அவ்வாறு அவள்காற்பங்குதூரம் இறங்கியிருப்பாள். அதற்குள் அந்தக் குழாயைப் பிடித்துக்