பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 245 கொண்டிருந்த இரும்பு வளையங்கள், இலேசாக சுவரில் பொருந்தி இருந்தனவாதலால் அவளது பாரத்தைத் தாங்க மாட்டாமல் ஒரே காலத்தில் எல்லாம் அடியோடு பிடுங்கிக் கொள்ள, குழாய் சுவரை விட்டு விலகி மரம் சாய்வது போல செங்குத்தாக ராஜபாட்டைப் பக்கம் சாய்ந்தது. அதைவிடாமல் இறுகப் பிடித்துக்கொண்டிருந்த ஷண்முகவடிவும் அதோடு சாய்ந்தாள். -

47-வது அதிகாரம்

ந வ நீ த பம்

சாமளராவோடு பூனா நகரத்திற்குச் சென்ற இளவரசர் அரண்மனைப் பூங்காவில் ஒளிந்திருந்து, அங்குவந்த காதலர் சம்பாஷணையை உற்றுக் கேட்டபிறகு, தமது பட்டமகிஷிதனது கற்பை இழந்துவிட்டாள் என்பதற்கு அதுவே போதுமான சாட்சியென்று தீர்மானித்தார். அவரிடம் நிரம்பவும் பயபக்தி விசுவாசமுடையவர்களான கூத்தாடி அன்னத்தம் மாளின் பெண்கள் அந்த விஷயத்தில் பட்டமகிஷிக்கு அநுசரணையாக இருப்பவர்கள் ஆதலால், அவர்களுள் ஒருத்தியை ரகசியமாக வரவழைத்து உண்மையை இன்னமும் நன்றாகத் தெரிந்து கொண்டு ஊருக்குத் திரும்பலாம் என்று சாமளராவ் கூற, இளவரசர் அதை ஒப்புக் கொண்டார். மறுநாள் சாமளராவ் அரண்மனைக்குப் போய் தனம் என்னும் தாதிப்பெண்ணை அழைத்துக் கொணர்ந்து இளவரசரிடம் விடுத்தான். அவள் முதலில் பட்டமகிஷியைப் பற்றிய ரகசியம் எதுவும் தனக்குத் தெரியாதென்று உறுதியாக மறுத்தாள்; இளவரசர் நிரம்பவும் தந்திரமாகப் பேசி, தாம் முதல்நாள் மாலையில் பூங்காவில் மறைந்திருந்து உற்றுக்கேட்டு எல்லாவிஷயங்களையும் தெரிந்து கொண்டதாகச் சொல்ல, உடனே தனம் பெரிதும் பயந்து நடுநடுங்கி நிரம்பவும் யோக்கியமான மனுவிபோல நடித்து,