பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249 படைகள் முதலியவை காண்போர் பிரமிக்கத் தக்கபடி, அணி வகுக்கப்பட்டு நின்றன. அவற்றின் பின் பாகங்களிலும், எதிர்ப் பக்கத்திலும் அவ்வூர் ஜனங்கள் லக்ஷக்கணக்கில் விஜயம் செய்து குதுகல புருஷராக வீற்றிருந்தனர். கொலு மண்டபத்தில் வரிசை வரிசையாக இருந்த தந்த நாற்காலிகளில், அந்தத் தேசத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான ஜெமீந்தார்களும், மிட்டாதார்களும், பாளையக்காரர்களும், தணிகர்களும், - மந்திரி, பிரதானி, சேனாதிபதி முதலிய பிரபல உத்தியோகஸ்தர்களும் ஜெகஜ் ஜோதியான ஆடையாபரணங்கள் அணிந்தவர்களாய் வீற்றிருந்தனர். முத்துப் பந்தலின் கீழ் தங்கமணையின் மீது அரண்மனைப் புரோகிதரும் ஏராளமான வேறு பல வேதியர்களும் அமர்ந்து ஹோமம் வளர்த்து மந்திர முழக்கம் செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான மேள வாத்தியங் களும், பாண்டுகளும் தெய்வ துந்துபியோவென அண்டம் செவிடுபடப் பெரு முழக்கம் செய்தன. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற தாசிகள் ஒரு புறத்தில் பரத நாட்டியமாடினர். வீணை, புல்லாங்குழல் முதலிய வாத்தியங் களின் தெய்வ கீதம் பற்பல இடங்களிலிருந்து இனிதொலித்தது. அந்தத் தேசத்திலிருந்த பாடகர்களும், வித்வான்களும் விகட கவிகளும், மல்லக ஜெட்டிகளும் ஆங்காங்கு தத்தம் திறமையைக் காட்டி ஜனங்களின் மனதை ரஞ்சிக்கச் செய்து கொண்டிருந்தனர்.

அத்தகைய அபார வைபவங்கள் நடைபெற, முத்துப் பந்தலின் கீழ் ஜாஜ்வல்லியமாக விளங்கிய இரண்டு நவரத்ன சிங்காசனங்களின் மீது இளவரசரும், பூர்ணசந்திரோதயமும் கோடி சூரியப் பிரகாசமாய் இனிது வீற்றிருந்தனர். அவர்களின் பின்புறத்தில் வெள்ளைப் புகைபோல நிரம்பவும் மெல்லியதாக இருந்த பட்டினாலான படுதாவின் மறைவில் ஆயிரக்கணக்கான ஸ்திரீகள் வீற்றிருந்தனர். அவர்களுள் இளவரசரது உறவினரும், ஜெமீந்தார்களது மனையாட்டிகளும், தாதிமார்களுமே பெரும்பாலாராக இருந்தனர். அப்போது அந்தக் கலியாண