பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பூர்ணசந்திரோதயம்-5 மண்டபத்தில் கூடியிருந்த சகலமான ஜனங்களது மனதும் சகிக்க இயலாத அபாரமான மனவெழுச்சி கொண்டு பிரமாதமான ஆவலினால் வதைக்கப்பட்டு இன்பமோ துன்பமோ என்பது தெரியாத பலவகைப்பட்ட உணர்ச்சிகளால் அல்லல் பட்டுக் கொண்டிருந்தது. பூர்ணசந்திரோதயம் அழகு, குணம், திறமை முதலிய சர்வ அம்சங்களிலும் ஒரு சட்டகம்போல தெய்வீக சிருஷ்டியாக வந்துள்ளவள் என்ற வதந்தி பன்னாட்களாய் அந்த நகர முழுவதும் பரவி இருந்தது ஆகையால், ஜனங்கள் இமை கொட்டாமல் அவளது அதிலாவண்ய மனமோகன சுந்தர வடிவத்தைப் பார்த்துப் பார்த்துப் பிரமிப்படைந்து பரவசமுற்று நெடுமூச்செறிந்தனர். பூனா தேசத்திலிருக்கும் பட்டமகிஷி ஒருகால் அந்தக் கலியாணச் செய்தியைக் கேட்டு, அதைத் தடுப்பதற்கான ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற ஐயம்

சிலரது மனதில் தோன்றியது. ஆகையால் அந்தக் கலியாணம் - எவ்வித இடையூறும் இன்றி இனிது நிறைவேற வேண்டுமே என்று நினைத்து ஆவலே வடிவாக இருந்தனர். லலிதகுமாரி தேவி தவறு செய்துவிட்டது உண்மைதான் என்று ஜனங்களெல்லோரும் மனப்பூர்வமாக நம்பி விட்டனர். ஆதலால், அவர்கள் லலிதகுமாரி தேவியின் மீது ஒருவித வெறுப்பும் குரோதமும் கொண்டதன்றி, பூர்ணசந்திரோதயத் திணிடம் அபாரமான வாஞ்சையும் பிரேமையும் வைத்து, அவளை இளவரசர்பட்டமகிஷி ஆக்குவதே உரிய காரியமென்ற உறுதியான விருப்பமும் கொண்டவராய்த் திருமாங்கல்ய தாரணத்தை ஆவலோடு எதிர்பார்த்தனர். இளவரசர் தமது கடைக்கண்களால் அடிக்கடி பூர்ணசந்திரோதயம் என்ற மின்னல் கொடியாளைக் கடாrத்து திவ்ய தேஜோமயமாகவும், சுவர்க்க லோகத்தின் பிரதிபிம்பம்போல ஒரே பேரின்ப நிறைவாகவும், குளிர்ச்சியும் ஸுகமும் நிறைந்த பூர்ணசந்திரனே உண்மையில் அங்குவந்து வீற்றிருக்கிறானோஎன்று ஐயுறத்தக்க வண்ணமும், பளிச்சென்று ஒரே ஜோதிகளாகவும், வீற்றிருந்த இன்ப வல்லியான அந்த மடவன்னத்தின் கண்கொள்ளா வனப்பில்