பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பூர்ணசந்திரோதயம் -5 எழுந்துபோய்ப் பூர்ணசந்திரோதயத்தின் முன்னால் நின்றார். அப்சரஸ்திரீகள் போன்ற ஏராளமான தாதிமார்களும் அவளைச் சூழ்ந்து, இளவரசர் திருமாங்கல்ய தாரணம் செய்தவற்கு உதவி செய்ய ஆயத்தமாக நின்றனர்; புரோகிதர்முதலியோர் ஒன்றுகூடி மாங்கல்யதாரண மந்திரத்தை வாய்விட்டுப் பலமாகக் கூறி கோஷிக்கத் தொடங்கினர். வாத்தியங்களெல்லாம் மங்கள முழக்கம் செய்யத் தொடங்கின.

அந்தச் சமயத்தில் கொலு மண்டபத்தின் அருகில் ஒரு பெருத்த கூக்குரல் உண்டாயிற்று. யாரோ ஒரு மனிதர், ‘மகா - ராஜாவே மகாராஜாவே நிறுத்துங்கள்!நிறுத்துங்கள்’ என்று ஓங்கிக் கூச்சலிட்டது, மற்ற சகலமானசப்தங்களைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து இளவரசரது காதில் பட்டது. அந்த விபரீதக் கூச்சலைக் கேட்ட இளவரசர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். அதேகாலத்தில் பூர்ணசந்திரோதயமும் திடுக்கிட்டுப் பிரமிப் படைந்து தனது சிரத்தை நிமிர்த்திப் பார்க்க, தலைவரிகோலமாக ஓடிவந்த ஒரு மனிதர் அவளது திருஷ்டியில் படவே, அவள் அவரது அடையாளத்தைக் கண்டு கொண்டாள். அவளது மனதில் அபாரமான திகிலும் குழப்பமும் குடிகொண்டன; அவளது உடம்பு கிடுகிடென்று நடுங்கத் தலைப்பட்டது. அவளது வசீகரமான முகம் தாமரை மலர் வாட்டமடைவது போல வாடிக் கீழே கவிழ்ந்தது. அவள் உணர்வு கலங்கி மயக்கமடைந்து தான் இருந்த ஆசனத்தில் அப்படியே சாய்ந்துவிட்டாள். அங்கே கூடியிருந்த எண்ணிறந்த ஸ்திரீகள், ஜெமீந்தார்கள், பெரிய மனிதர்கள் உத்தியோகஸ்தர்கள் முதலிய எல்லோரும் இளவரசரைப் போலவே திடுக் கிட்டுப் பிரமிப்படைந்து கூக்குரலுண்டானதிக்கில் தமது திருஷ்டியைத் திருப்பி உற்றுப் பார்த்தனர். ஆதலால், பூர்ணசந்திரோதயத்தின் நிலைமையை எவரும் கவனிக்கவில்லை. முகூர்த்தகாலம் தவறிப்போகுமென்று, புரோகிதர் துரிதமாகச் சடங்குகள் நடத்திவந்ததை இளவரசர் உணர்ந்திருந்தவர். ஆதலால், நல்ல