பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பூர்ணசந்திரோதயம்-5 அவனிருந்து கூச்சலிட்ட இடத்திற்கு அருகில் ஆயுதபாணிகளாக நின்ற சில சேவகர்கள் அவன் யாரோ பைத்தியக்காரன் என்று நினைத்து அவனது கைகளை இறுகப் பிடித்து, அப்புறம் இப்புறம் தாறுமாறாக இழுத்து வருத்த, அவன் எதற்கும் அஞ்சாமல் இளவரசரை நோக்கி முன்னிலும் அதிக பலமான குரலில் ஓங்கிப் பேசத் தொடங்கி, “மகாராஜாவே கொஞ்சம் பொறுங்கள். ஒரு முக்கியமானரகசியம் எனக்குத் தெரியும்.அது பூனாவிலுள்ள தங்கள் பட்டமகிஷி சம்பந்தமான ரகசியம். அதைத் தாங்கள் அவசியம் கேட்க வேண்டும். அந்த ராஜாத்தியின் விஷயத்தில் ஒரு பெருத்த சதியாலோசனை நடந்திருக்கிறது. அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களின் மேல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தோஷம் அபாண்டமானது. அதன் ரகசியம் எனக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறினான்.

அவனது சொற்களைக்கேட்ட இளவரசர் அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்து சிறிதுநேரம் மலைத்து நின்றுவிட்டார். அவன்பைத்தியக்காரனாக இருக்கமாட்டானென்ற ஒர் எண்ணம் அவரது மனதில் பட்டது. பூனாவிலுள்ள லலிதகுமாரி தேவியின் விஷயத்தைத் தாமே நேரில் சந்தேகமறக் கண்டு நிச்சயித்துக் கொண்டு வந்திருக்க, அவன் அதற்கு மாறாகப் பேசத் துணிந்தது அதியாச்சரியமாக இருந்தது. ஆனாலும், அத்தனை ஜனங்களின் முன்னிலையில், அவன் சொல்வதைக் கேட்டு தாம் கண்டதையும் ஒருவாறு வெளியிட்டுவிட்டால், தாம் செய்யும் காரியத்தை எல்லோரும் திருப்திகரமாக அங்கீகரிப்பார்கள் என்ற நினைவினால் தூண்டப்பட்ட இளவரசர் பாராக்காரர் களை நோக்கி, “பாராக்காரர்களே! அவனை உபத்திரவிக்க வேண்டாம். அவனை இப்படி நமக்கு முன் கொண்டு வாருங்கள். அவன் சொல்வதைக் கேட்போம். இதனால் முகூர்த்த காலம் கொஞ்சம் தவறிப்போனாலும் பாதகமில்லை. இந்த விஷயத்தின் உண்மை சகலமான ஜனங்களின் முன்னிலையில் நன்றாக வெளியாவதே உசிதமான காரியம்’ என்றார்.