பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 257 உற்சாகமும் பதைப்பும் சரேலென்று தணிந்து போயின. முகம் விகாரமாக மாறியது. பெருத்த விசனமும் அவமானமும் எழுந்து அவனது மனதைக் குடிகொண்டன. சகிக்க வொண்ணாத லஜ்ஜையும் சஞ்சலமும் கிளம்பி அவனது மனதை வதைத்துத் தேகத்தைக் குன்றச் செய்தன. அந்த ஒரு நொடியில் அவனது மனம் எண்ணிறந்த எண்ணங்களையும் யூகங்களையும் கொண்டது. பழைய நினைவுகளும் விஷயங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறைந்தன. கூத்தாடி அன்னத்தம்மாளின் மகள் கூறிய வரலாறு முழுதும் ஞாபகத்திற்கு வந்தது. அம்மணிபாயி என்ற பெயரைத் தான் சிவபாக்கியம் சொல்லத் தெரிந்துகொண்டதாக அவன் உணர்ந்தான். அதுவரையில் ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் தாறுமாறாகத்தோன்றிய சங்கதிகளெல்லாம் அப்போது நன்றாகத் தெளிவுபட்டன. அம்மணிபாயி இருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரன் கூறிய வரலாறெல்லாம் உண்மையானது என்பதும் உடனே தெரிந்தது. தான் அதற்கு முன் கமலத்தைக் கண்டது அம்மணி பாயி யின் வீட்டிலேதான் என்ற நிச்சயமும், அவள் சோமசுந்தரம் பிள்ளையைக் காணாமல் தவித்த காலத்தில் அம்மணிபாயியைக் கண்டு அவளது வஞ்சக வலையில் வீழ்ந்து, கடைசி வரையில் தனது தங்கைக்குப் பொய் யான விவரங்களை எல்லாம் கடிதங்களில் எழுதி வந்திருக்கிறாள் என்ற நிச்சயமும், கமலத்தை இளவரசருக்கு மணம்புரிவித்து அவரது பட்டமகிஷி ஆக் குவதற்காகவே, அவர்கள் கூத்தாடிப் பெண்களைப் பூனாவிற்கு அனுப்பினார்கள் என்ற உறுதியும் ஏற்பட்டன. ஆனால், அவர்கள் பூனாவில் இன்னவிதமானதந்திரம் செய்யப் போகிறார்கள் என்பது சிவபாக்கியத்தினிடம் சொல்லவில்லை. ஆதலால், அது கலியாணசுந்தரத்திற்கும் தெரியாமலிருந்தது. சகலமான நற்குணங்களும் நிறைந்த உத்தமியும், தனது ஆருயிர்க் காதலியுமான ஷண்முகவடிவின் சகோதரி அந்த மகா இழிவான மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதும், தானும் ஷண்முகவடிவும் கமலத்தின் கருத்திற்கு விரோதமாக எதிர்த்து வேலை செய்ய