பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பூர்ணசந்திரோதயம் - 5 நேர்ந்ததையும் நினைத்து நினைத்து அவன் சகிக்க வொண்ணாத பேராச்சரியத்தினால் மேற்கொள்ளப்பட்டு கலக்கமே வடிவாக மாறிப் போனான். தான் கண்டு பேசிய காலத்தில் மகா பரிசுத்தமான நடத்தையுடையவள் போலவும், அடக்கமான மனுஷிபோலவும் காணப்பட்ட கமலம் அப்படியும் செய்தாளா என்ற சந்தேகமே எழுந்துதான் காண்பது மெய்யோ பொய்யோ என்ற பிரமையை உண்டாக்கியது. யாதொரு குற்றமும் புரியாத நிரபராதியான லலிதகுமாரி தேவியின்மீது அபாண்டமான பொய்த்தோஷம் கற்பித்து, அவள் வாழ்நாள் முழுதும் இல்லற சுகத்தை இழந்துதுயரக்கடலில் மூழ்கிக்கிடக்கத்தக்க வழியைத் தேடிய மனிதர்கள் தமது சொந்தத் தாய் தகப் பன்மாராக இருந்தாலும், அவர்களைக் காட்டிக்கொடுத்து, தண்டனை நடத்திவைக்க வேண்டுமென்று எண்ணத்தக்க நடுநிலைதவறாத குணமுடையவன். ஆதலால், கமலத்தைத் தான் உடனேகாட்டிக் கொடுத்து அவளைப் பற்றி எல்லா ரகசியங்களையும் அந்த பிரம்மாண்டான ஸதசில் வெளியிட்டு அவள் பெருத்த மானபங்கமும் கொடிய தண்டனையும் அடையச் செய்ய வேண்டுமென்ற ஆத்திரமான ஒர் நினைவு அவனது மனதில் தோன்றியது. ஆனாலும், அடுத்த கூடிணத்தில் அந்த உறுதி தளர்வடைந்தது. ‘இவள் கமலம் என்ற பெண் தார்வார் தேசத்து ராஜகுமாரியல்ல என்று சொல்ல வாயெடுத்ததை அவன் உடனே அடக்கிக்கொண்டான். எப்படியெனில், அவனது மனதில் புகைப்படம் போலப் பதிந்து சதாகாலமும் மாறாமல் நின்று ஸான்னித்யம் செய்துகொண்டிருந்த ஷண்முகவடிவின் இன்பகரமான குளிர்ந்தமுகம் அப்போது அவனிடம் கெஞ்சி மன்றாடித் தனது அக்காளை மன்னிக்க வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்வது போன்ற ஒர் உணர்ச்சி அவனது மனதில் தோன்றியது. அதுவுமன்றி, கமலத்தின் சாயல் தத்ரூபம் ஷண்முகவடிவின் சாயலைப் போலவே இருந்தது ஆகையால், கலியான குணங்கள் நிறைந்த அவளது முகத்தைப் பார்க்கப் பார்க்க கலியாணசுந்தரத்தின் மனம் இளகிப் பெரிதும்