பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259 இரக்கம்கொண்டு நெகிழ்ந்து போயிற்று. ஆனால், அந்தத் தர்ம சங்கடத்தில் தான் என்ன செய்வது என்பதை நிச்சயிக்க மாட்டாமல், அவன் நிரம் பவும் தத்தளித்தான். கமலம் உண்மையிலேயே தனது தங்கையைப் போன்ற சிரேஷ்டமான குணமுடைய பெண்ணே என்ற நினைவும் அவள் பிறரது வஞ்சகச் சூழ்ச்சியில் அகப்பட்டு அந்த நிலைமைக்கு வந்திருக்கிறாள் ஆதலால், அவளிடம் தான் அதிக கொடுமை காட்டுவது ஒழுங்கல்ல என்ற நினைவும் எழுந்து அவளது விஷயத்தில் பெருத்த அனுதாபத்தை உண்டாக்கியது. அதோடு, இன்னொரு முக்கியமான விஷயம் அவனுக்கு நிரம்பவும் திருப்திகரமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. கமலம் அம்மணிபாயி என்னும் வேசையின் வசத்தில் சிக்கியும், மற்ற சாதாரண தாசிப் பெண்களைப் போல துன்மார்க்கத்தில் இறங்காமலும், தனது தேக பரிசுத்தத்தை இழக்காமலும், ராஜஸ்திரீஆகவேண்டுமென்ற அபாரமான மேம்பட்ட நோக்கம் கொண்டு, தன்னைக்கண்டு இளவரசர் காதலித்து, தமது பட்டமகிஷியாக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பத்தக்க வாறு ஒழுங்காகவும் சம்சயிக்க இடங்கொடாமல் உத்கிருஷ்ட மாகவும் நடந்துகொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் உதித்தது. ஆகையால், அவளுக்கு நேரிட்ட பெரிய விபத்தில் அது ஒரு பெருத்த அதிர்ஷ்டமான அம்சமாகத் தோன்றியது. ஆகவே, தான் அந்த நிலைமையில் எவ்விதம் நடந்து கொள்வதென்பதை நிச்சயிக்க மாட்டாதவனாய் நமது கலியாண சுந்தரம் இரண்டொரு விநாடி நேரம் கலங்கி நின்றான். அவள் தனக்கு உயிருக்குயிரான கமலமாக இருந்தாலும், அந்தக் கலியாணம் நிறைவேறாதபடிதடுக்க வேண்டியதும், அதனால் லலிதகுமாரி தேவிக்கு ஏற்பட இருக்கும் விபரீதமான அவகேட்டை விலக்குவதும் தனது கடமையென்பதை அவன் உறுதியாகக் கொண்டான். ஆனால், தன்னால் இயன்ற வரையில் தான் கமலத்தைக் காட்டிக் கொடுக்காமல் அந்தக் கடமையை எப்படியும் நிறைவேற்றியே தீரவேண்டுமென்று அவன் உடனே