பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 261 ஆனாலும், அவளது கண் பார்வையை இழந்து குருட்டுக் கண்ணாகவே இருந்தது. ஏனெனில், அவளது முழு மனமும், கவனமும் தனக்கு நேரப் போகும் பங்கத்தை எதிர்பார்ப்ப திலேயே சென்று கலங்கிக் கலவரமுற்றிருந்தன. ஆதலால், அவள் தன்னையும் உலகையும் மறந்து தேவத் யானமாக உட்கார்ந்திருந்தாள்.

அப்போது இளவரசர் கலியாணசுந்தரத்தை நோக்கி, ‘யாரப்பா நீ? இந்த முகூர்த்தம் சரியான வேளையில் நடக்க வேண்டுமென்று நாங்கள் நிரம் பவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மங்களகரமான காரியம் நடக்கும் சமயத்தில் நிறுத்து, நிறுத்து’ என்று சொல்லிக் கொண்டு நீ ஓடி வந்து தடுக்கிறாயே! எதற்காக நீ இப்படிச் செய்தாய்? உன்னை யார் இப்படிச் செய்யும்படி இங்கே அனுப்பியது? சங்கதியைச் சீக்கிரம் சொல்; நேரமாகிறது. முகூர்த்தம் தவறிப் போய் விடும்போலிருக்கிறது’ என்று அதட்டி வினவினார்.

அதைக் கேட்ட கலியாணசுந்தரம் நிரம்பவும் மரியாதை யாகவும் விநயமாகவும் பேசத் தொடங்கி, ‘மகாராஜாவே! தங்களிடத்திலாவது வேறே யாரிடத்திலாவது நான் விரோதமான எண்ணங் கொண்டு அபசகுனமாகத் தடை செய்ய வேண்டு மென்ற எண்ணத்தோடு நான் இங்கே வரவில்லை. இவ்வளவு முக்கியமான சடங்கு நடக்குங் காலையில் வந்து அதற்கு இடையூறு செய்யவேண்டியிருப்பதைப் பற்றி என் மனம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும், யாதொரு குற்றத்தையும் செய்யாத நிரபராதியான ஒரு மனிதருக்கு நேரப் போகும் பெருத்த அவகேட்டை விலக்க வேண்டும் என்ற ஜீவகாருண்யத்தினால் தூண்டப்பட்டே நான் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கே ஒடி வந்தேன். மகாராஜாவை நான் இத்தனை ஜனங்களுக்கு முன் அவமானப்படுத்த எண்ணி வந்ததாக எண்ணக்கூடாது’ என்று வணக்கமாகக் கூறினான்.