பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263 சொல்லாமலும் இருக்க முடியவில்லை. பூனா நகரத்திலுள்ள தங்கள் பட்டமகிஷியாருடைய விஷயத்தில் ஒரு பெருத்த அபவாதம் ஏற்பட்டு அது இந்த ஊர் முழுதும் பரவியிருக்கிற தாகத் தெரிகிறது. அதே முகாந்திரத்தை வைத்துக்கொண்டு தாங்கள் இந்தத் திருமணத்தை நடத்துகிறதாகவும் நான் கேள்வியுற்றேன். சில மனிதர்கள் கூடி ரகசியத்தில் சதியாலோசனை செய்து தங்களுடைய பட்டமகிஷியாரின்மேல் தாங்கள் சம்சயம் கொள்ளும்படியான நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள் என்பது எனக்குத் தற்செயலாகத் தெரிந்தது. அந்தக் கருத்தோடு இந்த ஊரிலிருந்து பூனா நகரத்துக்கு நான்கு தாதிகள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்யாமல் அந்த துன்மார்க்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் படி அவர்களுக்கு நல்ல புத்தி சொல்வதற்காக நான் அவர்களோடு கோலாப்பூர் வரையில் போனேன். அவர்கள் என்னுடைய விருப்பத்துக்கு இணங்கி வரவில்லை. அவர்கள் நல்ல அழகுடைய யெளவன ஸ்திரீகள். அவர்கள் என் புத்தியை மயக்கவும், அந்த விஷயத்தில் நான் அவர்களுடைய முயற்சிக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் அவர்களுக்கு வசப்பட்டிருக்கவும் முயன்று, பலவகையில் தந்திரம் செய்து பார்த்தார்கள். நான் அவர்களுடைய துர்ச் செய்கைகளுக்கு இணங்கவில்லை. ஆகையால், அவர்கள் எப்படியோ கோலாப்பூர் போலீஸ் கமிஷனருடைய தயவைச் சம்பாதித்துக் கொண்டு அவர் என்னை அக்கிரமமாகப் பிடித்துச் சிறைப்படுத்தி வைக்கும்படி செய்துவிட்டுப் பூனா நகரத்துக்குப் போய் விட்டனர். அதன்பிறகு சுமார் ஒன்றரை மாசகாலம் வரையில் நான் சிறைச்சாலையிலிருந்து ஒரு நண்பருடைய உதவியினால் தப்பித்துச் சமீபகாலத்தில்தான் இந்த ஊருக்கு வந்தேன். வந்த இடத்தில் கொஞ்சநேரத்துக்கு முன்னேதான் இந்தக் கலியாணச் செய்தியைக் கேள்வியுற்றேன். பட்டமகிஷி யாரின் எதிராளிகள் செய்த சூழ்ச்சி பலித்துவிட்டதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. எனக்குத் தெரிந்த