பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267 சுத்தமான மனுஷிபோலத் தோன்றி அடங்கி ஒடுங்கி வணக்கமாக இளவரசருக்கு எதிரில் வந்து நின்றாள்.

உடனே இளவரசர், “என்ன அம்மணிபாயி உன்னைப்பற்றி இந்த மனிதர் சொன்னதை எல்லாம் கேட்டாயா? என்ன சமாதானம் சொல்லுகிறாய்?” என்றார்.

உடனே அம்மணிபாயி நிரம்பவும் துணிவாகக் கணிரென்று பேசத் தொடங்கி, “மகாராஜாவே இந்த மனிதர் என்னைப் பற்றிச் சொல்வது முழுதும் அபாண்டமான பொய். நான் ஒரு பாவத்தையும் அறியேன். பட்டமகிஷியாருக்கும் எனக்கும் எந்த விஷயத்திலும் பகைமையே இல்லை. அதுவுமன்றி, மகாராஜாவே நேரில் போய் விஷயங்களைக் கண்ணாரக்கண்டு முடிவு செய்துகொண்டு வந்திருக்கையில், என்னுடைய சதியாலோசனையில் கட்டுப்பாடாக இந்த விஷயம் கற்பனை செய்யப்பட்டது என்பது தங்களுக்கு எப்படியும் தெரியாமல் போயிருக்காது. சிலமாத காலத்துக்குமுன் பூனாவுக்கு அனுப்ப நான்கு தாதிப் பெண்கள் தேவையென்று பெரிய ராணியார் என்னிடம் தெரிவித்தது நிஜமே. எனக்குப் பழக்கமான அன்னத்தம்மாள்தன் பெண்களை அனுப்ப ஒப்புக் கொண்டாள். பெரியராணியார்.அவர்களை அனுப்பினார்கள். ஆனால், அந்தப் பெண்களுள் சிவபாக்கியம் என்ற ஒருத்தி ஊருக்குப் புறப்படும் சமயத்தில் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு ஓடிப்போய் விட்டாளாம். ஏனென்றால், அவள் யாரோ ஒரு யெளவன புருஷன் மேல் பிரியம் கொண்டு அவனைவிட்டுப் பிரிய இஷ்டப்படாமல் வீட்டைவிட்டே அந்த மனிதரிடம் ஒடிப் போய் விட்டதாகவும் பிறகு நான்காவது தாதியாகத் தன் தங்கையை அனுப்பியதாகவும் அன்னத்தம்மாள் என்னிடம் சொன்னாள். அந்த சிவபாக்கியம் இந்த மனிதரிடம் இருப்பதாக இவரே ஒப்புக்கொள்ளுவதிலிருந்து, அவள் மோகங்கொண்ட மனிதர் இவரே என்பது நன்றாகத் தெரிகிறது. அவள் தன்னுடைய தாயின்மேல் பகைமை கொண்டு இந்த மனிதரிடம்