பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பூர்ணசந்திரோதயம் - 5 பொய்யான தகவல்களைச் சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தப் பெண்களிடத்திலிருந்து அன்னத்தம் மாளுக்கு வந்த கடிதங்கள் இப்போதும் அம்மன் பேட்டையில் இருக்கலாம். அவர்கள் சாவதானமாகப் பூனாதேசம் போய் வேலையை ஒப்புக்கொண்டதாக எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதங்களை மகாராஜா வரவழைத்துப் பார்த்தால், உண்மை நன்றாக விளங்கிப்போம். அந்த மனிதரை அவர்கள் சிறைப்படுத்தி வைத்தார் என்பதும் கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும். அதைப்பற்றியும், மகாராஜா கோலாப்பூரி லுள்ள போலீஸ் கமிஷனரை விசாரித்தால், இவர் சொல்வ தெல்லாம் பொய்யென்பது உடனே தெரிந்து போகு மென்று நினைக்கிறேன். இவர் இவ்வளவு தூரம் சொன்னாரே, முக்கியமான ஒரு விஷயத்தை இவர் விரிவாகச் சொல்ல வில்லையே. அந்தப் பெண்கள் பூனாவுக்குப் போய் அவ் விடத்தில் எவ்விதமான ஏற்பாடுகள் செய்ய உத்தேசித்தார்கள் என்ற விவரத்தை இவர் சொல்லவில்லையே. அவ்வளவு தூரத்திலுள்ள பூனாதேசத்தில் அரண்மனையிலுள்ள பட்ட மகிஷியார்துர்மார்க்கமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை இந்த ஊரிலுள்ள மகாராஜா தெரிந்து கொள்ளும்படி அந்த அற்பத் தாதிப்பெண்கள் என்ன செய்ய முடியும்? இது யாராலாவது சாத்தியமான விஷயமா? இது கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்கிற கதைபோல இருக்கிறதே அன்றி வேறல்ல’ என்றாள்.

அதைக்கேட்ட இளவரசர் அவள் சொன்னதை உண்மையென்று நம்பி கலியாணசுந்தரத்தை நோக்கி, “ஐயா! கேட்டீரா இந்த அம்மாள் சொன்னது? அந்தத் தாதிப்பெண்கள் பூனாவில் எவ்விதமான சூழ்ச்சிகள் செய்தார்கள் அந்த விவரத்தைச் சொல்லும் பார்க்கலாம்’ என்றார்.

கலியாணசுந்தரம் கலக்கமும் லஜ்ஜையும் அடைந்தவனாய், ‘மகாராஜாவே அந்த விவரம் எதுவும் அவர்கள் அந்தப் பெண்ணினிடம் சொல்லவில்லை. ஆகையால் அது எனக்குத்