பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2 கொண்டுபோய் பந்தோபஸ்தான ஒரிடத்தில் வைத்துக் காவல் போடுங்கள். இவர்களுடைய வழக்கை நாம் பிந்தி விசாரிப்போம்” என்று கூறிவிட்டு மறுபடியும் திருமாங்கலி யத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கீழே இறங்கினார். அம்மணிபாயி தனது மோசம் வெற்றியடைந்து விட்டதாக எண்ணி ஆனந்தபரவசம் அடைந்தவளாய் அவ்விடத்தை விட்டுச் சிறிது பின்னால் விலகி நின்றாள். இளவரசர் செய்த தீர்மானம் சரியானதென்று எல்லா ஜனங்களும் எண்ணியதன்றி திருமாங்கலிய தாரணம் அநாவசியமாக அவ்வளவு நேரம் தாமதப்பட்டுப் போகும்படி செய்ததைப் பற்றிக் கலியான சுந்தரத்தின் மீது வெறுப்பும், ஆத்திரமும் அடைந்தவராய், திருமாங்கலிய தாரணத்தை ஆவலோடு எதிர்பார்த்தனர். பூர்ணசந்திரோதயம் மாறி மாறி இன்பமும் துன்பமும் கவலையும் சந்தோஷமும் அடைந்தவளாய்த்தத்தளித்திருந்தாள். தன்னைக் காட்டிக்கொடுக்காமல் கலியாணசுந்தரம் நிரம்பவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டதைப் பற்றியும் யாதொரு இடையூறுமின்றித் தனது கலியாணம் நிறைவேறப் போவதைப் பற்றியும் அவள்மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். ஆனாலும் கலியாணசுந்தரம் அம்மணிபாயியினால் இழிவுபடுத்தப்படுவ தைக்கான, அவளது மனம் புண்பட்டு மாழ்கியது. ஆனால், தான் அந்தச் சந்தர்ப்பத்தில் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெளனமாக இருப்பதே உசிதமானதென்று சாந்தமாக வீற்றிருந்தாள்.

பாராக்காரர்களால் பலவந்தமாக இழுக்கப்பட்ட கலியான சுந்தரம் அதற்குமேல்தான் என்ன செய்வதென்பதை அறியாமல் முற்றிலும் கலவரமும் சங்கடமும் அடைந்தவனாய் முடிவாக இளவரசரைப் பார்த்தான். அந்தச் சமயத்தில் அவர் திருமாங்கலிய தாரணத்தை நிறைவேற்றும் பொருட்டு பூர்ணசந்திரோதயத்திற்கு முன்னால் போய்விட்டார். அதைக் கண்ட கலியாணசுந்தரம் அதற்கு மேலும் தான்சும்மா இருந்து, ஆ.ச.V-18