பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 அந்தச் சமயத்தில் மேளவாத்தியங்கள் மறுபடியும் பிரமாதமாக கோஷிக்கத் தொடங்கின. ஆதலால், கலியான சுந்தரம் கூறிய வார்த்தைகள் அவனுக்குப் பக்கத்திலிருந்த சிலரைத் தவிர, இளவரசர் பூர்ணசந்திரோதயம் முதலிய மற்ற எவர் செவிக்கும் எட்டவில்லை. பாராக்காரர்கள் கலியான சுந்தரத்தின் வாயை அடக்கி முன்னிலும் பலமாக அவனை இழுத்துக் கொண்டு சென்றனர். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இன்னொரு புதிய சம்பவம் நேர்ந்தது. கலியான சுந்தரம் கடைசியாகக் கமலத்தை விளித்துப் பேசிய இடம் ஜெமீந்தார்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளுக்கு நிரம்பவும் சமீபமாக இருந்தது ஆகையால், அவ்விடத்தில் ஒரு நாற்காலி யில் உட்கார்ந்திருந்த பவானியம்பாள்புரம் ஜெமீந்தாரானநமது நீலமேகம்பிள்ளை யின் செவிகளில் கலியாணசுந்தரம் கூறிய சொற்கள் விழுந்தன.

முன்னோர் அதிகாரத்தில் நீலமேகம் பிள்ளை திருவாரூருக்குப் போய்விட்டுத் திரும்பித் தஞ்சைக்கு வந்து அம்மணி பாயியின் வீட்டிற்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரது வீட்டிற்கும் மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகைக்கும் சென்றிருந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டதல்லவா, அதன்பிறகு இன்ஸ்பெக்டர், லீலாவதி ஷண்முகவடிவு கமலம் ஆகிய மூவரையும் தேடி மீட்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் தாமே தீவிரமாய்ச் செய்வதாக ஏற்றுக்கொண்டு நீலமேகம் பிள்ளையை அவரது மாளிகைக்கு அனுப்பி வைத்தார். அதற்குமுன் அவர் தமது தந்தை காணாமல் போன காலத்தில் அடைந்ததுயரத்தையும், கவலையையும் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக விசனித்துக் கவலையுற்றுத் தமது தங்கை மார்களும், லீலாவதியும் காணாமல் போனதைப் பற்றிய ஏக்கத்திலேயே ஆழ்ந்து கிடந்தார். அந்தச் சமயத்தில் இளவரசருக்கும் பூர்ணசந்திரோதயத்திற்கும் திருமணம் நடக்கப் போவதாக எழுதப்பட்டிருந்த கலியாணப் பத்திரிகை எல்லா