பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பூர்ணசந்திரோதயம் - 5 ஜெமீந்தார்களுக்கும் அனுப்பப்பட்டதுபோல அவருக்கும் அனுப்பப்பட்டது. ஆகையால், அதைப் பார்த்தவுடன், நீலமேகம் பிள்ளைக்கு இளவரசர் மீது பெருத்த அருவருப்பும் கோபமும் உண்டாயிற்று. அவர் பாலியப் பருவமடைந்தது முதல் இறக்கும் காலம் வரையிலும் புதிய புதிய மனைவிமாரை மணந்துகொண்டுதான் இருப்பாரோ என்று தமக்குத் தாமே ஏளனமாக நினைத்துக் கொண்டார். அவர் தமது தந்தையின் உயிலைப் படித்த காலம் வரையில் இளவரசர் மீது பகைமை கொள்ள எவ்விதமான ஏதுவுமில்லாதிருந்தது. ஆகையால், அவர் இளவரசரிடம் சாதாரணமான நட்பாகவே இருந்து வந்தார். அவர்தமது தாய் இறப்பதற்குக்காரணமாயிருந்த பெருந்துரோகி என்ற செய்தியை உயிலின் மூலமாக அவர் அறிந்த பின்னர், தாம் அவர் முகத்திலும் இனி விழிக்கக் கூடாது என்ற ஓர் உறுதி அவரது மனதில் ஏற்பட்டிருந்தது. ஆனால், திருமணப் பத்திரிகையைப் பார்த்தவுடனே தான் முகூர்த்தத்திற்குப் போவதா இல்லையா என்ற கேள்வி அவரது மனதில் தோன்றி வதைத்தது. அந்தத் தேசத்து மகாராஜனால் கொடுக்கப்பட்ட ஜெமீன் சமஸ்தானத்தின் தலைவராதலால், தாம் அவரிடம் நேருக்கு நேர் பகைமை காட்டினால், அவர் ஒருகால் தமது சமஸ்தானத்தையே அபகரித்துக் கொண்டாலும் கொள்ளலாம் என்ற ஒர் எண்ணமும் உண்டாயிற்று. அதுவுமன்றி, அதுகாறும் தாம் அவரோடு சிநேகப்பான்மையாக இருந்துவிட்டு அப்போது திடீரென்று முக்கியமான சந்தர்ப்பத்தில் போகாமல் இருந்து விட்டால், இளவரசரும் மற்றவரும் அதைப் பற்றிப் பலவகையில் சந்தேகப்பட்டு வம்பு பேசுவார்கள் என்று நினைத்தவராய் ஒப்புக்குச் சிறிதுநேரம் கலியாணத்தில் கும்பலோடு கும்பலாகத் தாம்போய்விட்டு வந்து விடுவதில் யாதொரு கெடுதலும் இல்லையென்று தீர்மானித்துக் கொண்டவராய் அவர் புறப்பட்டுக் கலியான மண்டபத்திற்கு வந்து ஜெமீந்தார்களுக்குப் போடப்பட்டிருந்த ஆசனங்கள் ஒன்றில் அமர்ந்திருந்தார். ஆனால், அவர் அன்னிய ஸ்திரீகளை