பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 275 ஏறெடுத்துப் பார்ப்பது பாவச் செய்கை என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். அதுவுமன்றி, அப்படித்தாம் பார்ப்பது மாத்திரம் பாவச்செய்கை அல்ல ஆனாலும், அதனால் தமது மனம் கெட்ட எண்ணங் கொண்டு தாம் துன்மார்க்கமான நடத்தையில் இறங்கும் படி தூண்டும் ஆதலால், ஒவ்வொருவரும் அப்படி முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது, பின்னால் தாம் செய்யக்கூடிய பாவச் செயல்களையும் தமக்கு நேரக் கூடிய எண்ணிறந்த துன்பங்களையும் தடுத்தமாதிரியாவது இருக்கும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே, நீலமேகம்பிள்ளை கண் கொள்ளா வனப்போடு தேஜோமயமாக வீற்றிருந்த பூர்ணசந்திரோதயத்தை நிமிர்ந்து பார்க்காமலேயே இருந்தார். ஆனால், திருமாங்கலிய தாரணம் நடக்கப் போன தருணத்தில் கலியாணசுந்தரம் திடீரென்று தோன்றி இளவரசரோடு வாக்குவாதம் செய்த காலத்தில் நீலமேகம் பிள்ளை நிரம் பவும் ஆவலோடும் சிரத்தையோடும் அந்த விஷயத்தைக் கவனித்துக் கேட்கத் தொடங்கினார். முடிவில் அம்மணிபாயி எதிரில் வந்து நின்றபோது, தானும் கருப்பாயியும் அவளது வீட்டிற்குப் போய் அவளைச் சந்தித்துப் பேசிய நினைவு உண்டாயிற்று. அவள் கமலத்தையும் ஷண்முகவடிவையும் வஞ்சித்தவள் என்ற எண்ணம் மாத்திரம் அவரது மனதில் உண்டாயிற்றே அன்றி, அவள் பட்டமகிஷிக்குப் பதிலாக கமலத்தை இளவரசருக்குக் கலியாணம் செய்து வைக்க சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறாள் என்ற யோசனை தோன்றவில்லை. அவள் ஷண்முகவடிவை மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையில் கொண்டுபோய் விட்டதுபோல, கமலத்தையும் வேறே யாராவது பெரிய மனிதரிடத்தில் கொண்டு போய் விட்டிருப்பாள் என்ற நினைவையே அவர் கொண்டிருந்தார். ஆதலால், கமலமே அப்போது சிம்மாசனத்தில் உட்கார்ந்தி ருப்பவள் என்ற சம்சயம் ஏற்படவில்லை ஆகையால், அவர்

கடைசி வரையில் கமலத்தைப் பார்க்காமலேயே இருந்தார்.