பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பூர்ணசந்திரோதயம் - 5 வீட்டுக்கு வரத் தொடங்கினார். அவர் இந்த ராஜ்யத்தின் பட்டத்துக்குரிய இளவரசராதலால், அவர் அரண்மனையை விட்டு எவருடைய மாளிகைக்கும் போவது இழுக்கென்று அரண்மனையிலுள்ள பெரியோர்கள் எவ்வளவு சொல்லி யதையும் கேளாமல் அவர் நம்முடைய ஜாகைக்கு அடிக்கடி வந்துவிடுவார். அப்படி வருபவருக்கு நான் பதில் மரியாதை களும், விருந்துகளும், பாட்டுக் கச்சேரிகளும் நடப்பிவித்தேன். அவர் அப்போது பார்வைக்கு மகா அற்புதமான தேஜசோடு தத்ரூபம் மன்மதன்போலவே யிருந்தார். அந்தக் காலத்தில் அவரைப் பார்த்து ஆசைப்படாத பெண்டீரே இல்லையென்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். அப்படிப்பட்ட யெளவன வடிவழகர் அடிக்கடி என் மாளிகைக்கு வருவதும், என்னோடு வெகு நேரம் விளையாடிக் கொண்டிருப்பதும் சில நாட்களில் இரவில் கூட நம்முடைய ஜாகையிலேயே படுத்து இரவைப் போக்குவதுமாகச் செய்யத் தொடங்கினார். நம்முடைய வீட்டிலுள்ள சகலமான மனிதர்களும், அவர் இந்த நாட்டின் அரசர் என்பதைக் கருதியும், அவரது வசீகரமான அழகையும் குணங்களையும் கண்டு மயங்கியும், அவரிடம் அபாரமான வாஞ்சையும் மரியாதையும் வைக்கத் தொடங்கினார். என் மனைவியான பங்கஜவல்லியும் அவரைப் பல தடவைகளில் பார்த்து, நானும் அவளும் தனியாக இருந்த காலங்களில் அவரது சிரேஷ்டமான அழகைப் பற்றியும் குணங்களைப் பற்றியும் ஒருவாறு புகழ்ச்சியாகப் பேசினாள். என்னுடைய தகப்பனார் என் பாலியப் பருவத்திலேயே இறந்துபோய் விட்டார். ஆதலால், நம்முடைய சமஸ்தான நிருவாக காரியமெல்லாம் என் மேல் வந்து இறங்கியிருந்தது. ஆகையால், நான் இடைவெளியில் அந்தக் காரியங்களையும் கவனித்துக் கொள்ள நேர்ந்தது; என்னுடைய கவனத்தையும், காலத்தையும் நான் முறையே என் சம்சாரத்தினிடமும், இளவரசரிடத்திலும், சமஸ்தான நிருவாக விஷயங்களிலும் செலுத்தி வந்தேன். வெளியூரிலுள்ள நம்முடைய